`அவர் ஃபிட்டா இருந்தா 100 சதங்கள் எல்லாம் அசால்ட்!’ - விராட் கோலியைப் புகழும் முன்னாள் கேப்டன் | He will score 100 ODI centuries, says azharuddin about Virat kohli

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (16/01/2019)

கடைசி தொடர்பு:14:50 (16/01/2019)

`அவர் ஃபிட்டா இருந்தா 100 சதங்கள் எல்லாம் அசால்ட்!’ - விராட் கோலியைப் புகழும் முன்னாள் கேப்டன்

விராட் கோலி ஃபிட்டாக இருக்கும்பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் 100 சதங்கள் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைப்பார் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்திருக்கிறார். 

விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 299 ரன்கள் இலக்கை கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி எட்டியது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலி, தனது 39வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். அதேபோல், மோசமான ஃபார்ம் காரணமாக சமீபகாலமாக விமர்சிக்கப்பட்டு வந்த தோனி, அரை சதமடித்து வெற்றிக்கு வித்திட்டார்.

முகமது அசாருதீன்

போட்டிக்குப் பின்னர் தோனியைப் புகழ்ந்த கேப்டன் கோலி, ``இது தோனி கிளாசிக்’’ என்று நெகிழ்ந்திருந்தார். அதேபோல், சேஸிங்கின் கில்லி என ரசிகர்கள் விராட் கோலி குறித்துப் புகழ்ந்து வருகிறார்கள். அடிலெய்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. 

விராட் கோலி

இந்தநிலையில், விராட் கோலி ஃபிட்டாக இருந்தால் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 100 சதங்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் புகழ்ந்துள்ளார். ஆஜ் தக் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் கூறுகையில், ``காயங்கள் ஏதும் ஏற்படாதநிலையில், விராட் கோலியால் இதை நிச்சயம் சாதிக்க இயலும். உலக அளவில் தற்போது கிரிக்கெட் விளையாடிவரும் வீரர்களை விட விராட் கோலியால் தொடர்ச்சியாக ரன்குவிக்க முடிகிறது’’என்று கூறியிருக்கிறார்.