உலகக் கோப்பை 2019 - முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா! | india faces South Africa opener match in world cup 2019

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (17/01/2019)

கடைசி தொடர்பு:10:23 (17/01/2019)

உலகக் கோப்பை 2019 - முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா!

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி ஜூன் 5-ம் தேதி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணியை சவுதம்டன் நகரில் சந்திக்கிறது. மே மாதம் 30-ம் தேதி நடைபெறவுள்ள உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது 

தென்னாப்பிரிக்கா கேப்டன் டூப்ளசிஸ்

இந்த முறை ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடைபெறவுள்ளதால் ஒவ்வோர் அணியும் ஒவ்வோர் அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த அணிகள் லீக் சுற்று ஆட்டங்கள் வரை பகலிரவு ஆட்டங்கள் இல்லாத வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பகலிரவு ஆட்டங்கள் நடந்தால் ஆசியாவில் நள்ளிரவு ஆகி விடும் என்பதால் இந்த முறை பின்பற்றப்பட்டுள்ளது. 

இண்டாவது ஆட்டத்தில் இந்தியா ஜூன் 9-ம் தேதி ஆஸ்திரேலியா அணியை ஓவல் மைதானத்தில் சந்திக்கிறது. நாட்டிங்ஹாமில் ஜூன் 13-ம் தேதி நியூசிலாந்தையும் மான்செஸ்டரில் ஜூன் 16-ம் தேதி பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்கிறது. தொடர்ந்து சவுதம்டனில் ஜூன் 22-ம் தேதி ஆப்கானிஸ்தானையும் 27-ம் தேதி மான்செஸ்டரில் மேற்குஇந்தியத் தீவுகள் அணியையும் எதிர்த்து இந்தியா விளையாடுகிறது. 

கோலியுடன் தோனி

போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியை 30-ம் தேதி பர்மிங்ஹாமில் இந்தியா சந்திக்கிறது. இதே மைதானத்தில் ஜூலை 1-ம் தேதி வங்கதேசத்துடனும் 6-ம் தேதி லீட்ஸ் நகரில் இலங்கை அணியுடன் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி களம் காண்கிறது. 

இங்கிலாந்தில் 10 நகரங்களில் 11 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இறுதி ஆட்டம் ஜூலை 14-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி பகலிரவு ஆட்டங்களாக நடைபெறும். 

ஐ.சி.சியின் செயற் அதிகாரிகள் குழு இந்த முழு அட்டவணையை தயார் செய்து ஐ.சி.சி. போர்டு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஐ.சி.சி. ஒப்புதல் அளித்ததும் அதிகாரபூர்வமாக அட்டவணை வெளியிடப்படும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க