2009-ல் தோனி; 2019-ல் விராட் கோலி! - ஐ.சி.சி பகிர்ந்த நாஸ்டால்ஜியா ரேங்கிங் லிஸ்ட் | ICC shares #10yearChallange pictures on rankings

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (17/01/2019)

கடைசி தொடர்பு:13:00 (17/01/2019)

2009-ல் தோனி; 2019-ல் விராட் கோலி! - ஐ.சி.சி பகிர்ந்த நாஸ்டால்ஜியா ரேங்கிங் லிஸ்ட்

சமீபகாலமாக இணையத்தில் ஹிட்டடிக்கும் #10YearChallenge வரிசையில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் சர்வதேசக் கிரிக்கெட் தரவரிசையில் இடம்பிடித்த வீரர்கள் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டிருக்கிறது. 

விராட் கோலி - தோனி

சமூக வலைதளங்களில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படத்தையும் தற்போதுள்ள புகைப்படத்தையும் இணைத்து #10YearChallenge என்ற ஹேஷ்டேக்கில் பல்வேறு தரப்பினரும் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் சினிமா, அரசியல், விளையாட்டு எனப் பல்துறை பிரபலங்களும் 10 ஆண்டு இடைவெளியில் எடுக்கப்பட்ட தங்களின் புகைப்படங்களை ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர். 

ஐசிசி வெளியிட்ட தரவரிசைப் பட்டியல்

அந்தவகையில், சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலும் வீரர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறது. அதேபோல், கடந்த 2009 மற்றும் தற்போதைய சூழலில் வீரர்களில் தரவரிசைப் பட்டியலையும் ஐ.சி.சி வெளியிட்டிருக்கிறது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைக் கடந்த 2009-ல் அப்போதைய கேப்டன் மகேந்திரசிங் தோனியும் 2019-ல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் பிடித்திருக்கின்றனர்.

ஐசிசி வெளியிட்ட தோனி புகைப்படங்கள்

இந்தத் தகவலுடன் முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டிருக்கிறது. அதேபோல், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலையும் ஐ.சி.சி வெளியிட்டிருக்கிறது.