விஜய் சங்கர் அறிமுகம்! - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND | 3rd ODI Indian Captain kohli wins the toss and elects to bowl first

வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (18/01/2019)

கடைசி தொடர்பு:09:37 (18/01/2019)

விஜய் சங்கர் அறிமுகம்! - மூன்றாவது முறையாக இந்திய அணி சேஸிங் #AUSvIND

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி - ஆஸி. கேப்டன் ஆரோன் பின்ச்

Photo Credit: BCCI

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்குப் பின்னர், ஒருநாள் தொடர் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. மழையால் டாஸ் போடுவதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். 

இந்திய அணிக்காக அறிமுகமாகும் விஜய் சங்கர்

Photo Credit: BCCI

இந்தப் போட்டியின் மூலம் தமிழக வீரர் விஜய் சங்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார். இந்திய அணி 3 மாற்றங்களுடன் களமிறங்குகிறது. முகமது சிராஜ், அம்பாதி ராயுடு மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக விஜய் சங்கர், கேதர் ஜாதவ் மற்றும் யுஷ்வேந்திர சஹால் ஆகியோர் களமிறங்குகிறார்கள். 

டாஸின்போது பேசிய கேப்டன் கோலி, ``மழை காரணமாக ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். முதல் போட்டியில் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு தொடரைச் சமன் செய்திருக்கிறோம். இது மிகவும் முக்கியமானது. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய நினைக்கிறோம்’’ என்றார்.