'இந்த வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை!' - ஃபெடரருக்கு அதிர்ச்சிகொடுத்த சிட்சிபாஸ் | Tsitsipas's knocks out Roger Federer

வெளியிடப்பட்ட நேரம்: 08:34 (21/01/2019)

கடைசி தொடர்பு:08:34 (21/01/2019)

'இந்த வெற்றியை விவரிக்க வார்த்தைகளே இல்லை!' - ஃபெடரருக்கு அதிர்ச்சிகொடுத்த சிட்சிபாஸ்

சிட்சிபாஸ்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான  ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ், மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டத்தில், சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாசுஸும் மோதினார்கள். முதல் செட்டில் போட்டி விறுவிறுப்படைய ஆரம்பித்தது. கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, ஃபெடரர் முதல் செட்டை 7- 6 என்ற கணக்கில் வசப்படுத்தினார். அடுத்த செட்டில் சுதாரித்துக்கொண்ட சிட்சிபாஸ் ஃபெடரருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். முடிவில் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வெற்றிபெற்றார். இந்தப் போட்டி, 3 மணி 45 நிமிடங்கள் நீடித்தது. இந்தத் தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா ஓப்பனில் இருந்து ஃபெடரர் வெளியேறினார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சிட்சிபாஸ் காலிறுதிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

ஃபெடரர்


போட்டிக்குப் பின்னர் பேசிய சிட்சிபாஸ், ‘ இந்த உலகில் இப்போது என்னைவிட மகிழ்ச்சியான மனிதராக யாரும் இருக்க முடியாது. ஃபெடரர் ஒரு ஜாம்பவான். அவர்மீது  அதிக மரியாதை வைத்திருக்கிறேன். பல வருடங்களாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நான் என்னுடைய 6-வது வயதில் இருந்து அவரை கவனித்துவருகிறேன். அவரை களத்தில் சந்திக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. இறுதியில் வெற்றியும் பெற்றுவிட்டேன். இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.' என்றார்.