வரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்! | Ronaldo accepts fine of 19 million euros for tax evasion

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (22/01/2019)

கடைசி தொடர்பு:21:40 (22/01/2019)

வரி ஏய்ப்பு வழக்கு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 150 கோடி ரூபாய் அபாரதம்!

உலகப்புகழ் பெற்ற பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு, வரி ஏய்ப்பு காரணமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரொனால்டோ

போர்ச்சுக்கல் தேசிய அணிக்காகவும், யுவெண்டஸ் க்ளப்புக்காவும் விளையாடி வரும் ரொனால்டோ மீது ஸ்பெயின் நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார். புகாரில், வரி ஏய்ப்பு செய்ததற்காக ரொனால்டோவுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் வழங்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ரொனால்டோ

இந்த வழக்கு விசாரணைக்காக இன்று ஸ்பெயின் தலைநகரம் மேட்ரிட் வந்திருந்த ரொனால்டோ, நீதிமன்றத்தில் ஆஜரானார். 45 நிமிடங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், கிறிஸ்டியானோ ரொனால்டோ மீதான வரி ஏய்ப்புக் குற்றம் உறுதி செய்யப்பட்டது. ஸ்பெயின் சட்ட விதிமுறைகளின்படி, வன்முறை அல்லாத குற்றங்களுக்காக முதல் முறை குற்றம் சுமத்தப்பட்டவர்கள், சிறைத் தண்டனைக்குப் பதிலாக அபராதத் தொகையை செலுத்தலாம் என்பதால் 23 மாதம் சிறை செல்வதில் இருந்து தப்பித்தார் ரொனால்டோ. எனவே, வரி ஏய்ப்புக் குற்றத்துக்காக 18.8 மில்லியன் யூரோஸ், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 150 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின்போது, சிறைத்தண்டனையை தவிர்க்க அபராதம் செலுத்த ஒப்புக்கொள்வதாக ரொனால்டோ தெரிவித்தார்.