விராட் கோலிக்கு ரெஸ்ட்! - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND | Virat kohli rested for 2 ODIs against New Zealand

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (23/01/2019)

கடைசி தொடர்பு:23:30 (23/01/2019)

விராட் கோலிக்கு ரெஸ்ட்! - ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி #NZvIND

நியூஸிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதிலாக ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

விராட் கோலி

Photo Credit:ICC

ஆஸ்திரேலிய தொடரை சாதனை வெற்றியுடன் நிறைவுசெய்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, நியூஸிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கிடையே, 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது.  முதல் ஒருநாள் போட்டி, நேப்பியரில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. 

இந்திய அணி

Photo Credit:ICC

இந்த நிலையில், நியூஸிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவைகளில் இருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது. `கடந்த சில மாதங்களாக, அவரது பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, அணி நிர்வாகமும் தேர்வுக் குழுவும்  விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்க விரும்பினோம். ஆஸ்திரேலிய தொடருக்கு இது உதவிகரமாக இருக்கும்’ என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.