இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தடை நீக்கம்! - பாண்ட்யா, ராகுல் சர்ச்சையில் பிசிசிஐ புது முடிவு | Pandya and Rahul Suspensions Lifted

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (24/01/2019)

கடைசி தொடர்பு:20:36 (24/01/2019)

இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தடை நீக்கம்! - பாண்ட்யா, ராகுல் சர்ச்சையில் பிசிசிஐ புது முடிவு

பாண்ட்யா, ராகுல் மீதான தடையை நீக்கி பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

பி.சி.சி.ஐ

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரின் `காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் சமீபத்தில் விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர்கள்  பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் கலந்துகொண்டனர். கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். அப்போது, பெண்கள் மற்றும் இனவெறி குறித்து பாண்ட்யா சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் பேச்சுக்கு கண்டனங்கள் எழவே, ``தன்னுடைய கருத்து யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், மன்னித்து விடுங்கள்'' என ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார் பாண்ட்யா. 

ஹர்டிக் பாண்ட்யா

இந்த விவகாரத்தில் பி.சி.சி.ஐ தலையிட்டு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்றிருந்த இருவரும் இந்திய அணியிலிருந்து இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடத்தில் விசாரணை நடத்தி வந்தது. விசாரணை முடிவடையும் வரை அவர்கள் விளையாட இடைக்காலத் தடை விதித்துக் கடந்த 11-ம் தேதி பி.சி.சி.ஐ உத்தரவு பிறப்பித்தது.  

பாண்ட்யா

இதனால் ஆஸ்திரேலியாவிலிருந்து தாய்நாடு  திரும்பிய பாண்ட்யா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். இந்தநிலையில், பாண்ட்யா, ராகுல் மீதான இடைக்காலத் தடையை நீக்குவதாக பி.சி.சி.ஐ இன்று அறிவித்துள்ளது. அதேநேரம் இருவர் மீதான விசாரணை தொடரும் என்று அறிவித்துள்ளது. இருவர் மீது விசாரணை நடத்த விசாரணை அதிகாரியை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தடை நீக்கப்பட்டுள்ளது. தடை நீக்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து தொடருக்கு இருவரும் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க