ஓவல் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி - நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு  | A clinical batting performance from Team india in oval

வெளியிடப்பட்ட நேரம்: 12:01 (26/01/2019)

கடைசி தொடர்பு:12:01 (26/01/2019)

ஓவல் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடி - நியூசிலாந்துக்கு 325 ரன்கள் இலக்கு 

தோனி


இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்தியாவின் இன்னிங்ஸை ரோகித் ஷர்மா - ஷிகர் தவான் ஆகியோர் தொடங்கினர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்குச் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் அரை சதங்களைக் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர்.

தவான்

இந்தக் கூட்டணியை டிரென்ட் பவுல்ட் உடைத்தார். இவரது பந்துவீச்சில் தவான் (66 ரன்கள்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் ஷர்மா சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தவான் வெளியேறிய சிறிது நேரத்தில் ரோகித் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ரோகித் ஷர்மா 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்திருந்தார்.

ரோகித் ஷர்மா


பின்னர் இணைந்த விராட் கோலி - அம்பத்தி ராயுடு இணை ரன் ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர். இதனால் அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் சென்றது. விராட்கோலி 43, ரன்களில் வெளியேற அடுத்து தோனி களமிறங்கினார். சிறிதுநேரத்தில் அம்பத்தி ராயுடுவும் அவுட்டானார். முதலில் நிதானமாக ஆடிய தோனி சிறிது நேரத்தில் அதிரடியில் களமிறங்கினார். அவருக்கு கேதர் ஜாதவ் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் இறுதியில் அதிரடியாக ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் இந்திய 4 விக்கெட் இழப்பு 324 ரன்கள் எடுத்தது. தோனி 48 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 22 ரன்களுடனும் விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தனர்.

நியூசிலாந்து

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 87 ரன்கள் எடுத்திருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் தலா விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நியூசிலாந்து அணி 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலையில் உள்ளது.