`தோனி அவுட்; பாண்டியா இன்’ - இரண்டு மாற்றங்களுடன் களம் காணும் இந்தியா! | 3rd ODI. Toss won by New Zealand, who chose to bat

வெளியிடப்பட்ட நேரம்: 07:21 (28/01/2019)

கடைசி தொடர்பு:10:26 (28/01/2019)

`தோனி அவுட்; பாண்டியா இன்’ - இரண்டு மாற்றங்களுடன் களம் காணும் இந்தியா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச உள்ளது. 

தோனி 

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி இன்று மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. மவுன்ட் மவுங்காநூயில் தொடங்கியுள்ள இந்தப் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் தமிழக வீரர் விஜய் சங்கருக்குப் பதிலாக ஹர்டிக் பாண்டியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

தோனி 

கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். சமீபத்தில் தடை நீக்கப்பட்டதால் அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நியூசிலாந்து அணியிலும் மிட்சேல் சான்டர் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றலாம். வெற்றி பெற இந்திய வீரர்கள் முனைப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு வெற்றிகூட பெறாத நியூசிலாந்து அணியும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க