வலியால் துடித்த கரோலினா... ஆறுதல் சொன்ன சாய்னா நேவால்! | Saina consoles injured Carolina Marin in Indonesian masters finals

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (29/01/2019)

கடைசி தொடர்பு:01:05 (29/01/2019)

வலியால் துடித்த கரோலினா... ஆறுதல் சொன்ன சாய்னா நேவால்!

பேட்மின்டன் விளையாட்டு நட்சத்திரமான சாய்னா நேவால், 2019-ம் ஆண்டின் முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சாய்னா, மூன்று முறை உலக சாம்பியனான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மார்லினை எதிர்கொண்டார்.

                        சாய்னா நேவால்


இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 10- 4 என்ற புள்ளி கணக்கில் கரோலினா மர்லின் முன்னிலை பெற்றார். அப்போது, கரோலினா மர்லினின்  இடது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், போட்டியின் நடுவே வெளியேறினார். இதையடுத்து, சாய்னா சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டது

காயம் காரணமாக வலி ஏற்பட்டதால், பேட்மின்டன் கோர்ட்டிலேயே கரோலினா கீழே விழுந்தார். சட்டென்று உதவிக்கு ஓடிய சாய்னா, கரோலினாவுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துச்சென்றார். இதுகுறித்து சாய்னா கூறுகையில், “இறுதிப் போட்டியில் இப்படி ஒரு முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. காயங்கள் வலியானது. அதுவும் போட்டியின் நடுவே காயம் ஏற்படுவது மிகுந்த வருத்தத்தைத் தரும். கரோலினா, போட்டியை சிறப்பாகத் தொடங்கினார். ஆனால் காயம், போட்டியின் முடிவை மாற்றியது” என்றார்.

சாய்னா  - கரோலினா


”கரோலினா மார்லின் விரைவில் உடல் நலம் சீராகி வர வேண்டுகிறேன்” எனவும் சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  கரோலினா - சாய்னா  இடையேயான நட்பைப் பாராட்டி, “இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற முதல் இந்திய வீராங்கனை சாய்னாவுக்கு வாழ்த்துகள். சாய்னாவின் ஆறுதல் பாராட்டுக்குரியது. கரோலினா மர்லின் விரைவில் உடல்நலம் சரியாகி வரவேண்டும்” என்று சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டிருந்தார். 


[X] Close

[X] Close