டி-20 தொடருக்கு இளம்வீரர்கள் - இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து வியூகம் | new zealand t20 cricket team announced

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/01/2019)

கடைசி தொடர்பு:16:00 (30/01/2019)

டி-20 தொடருக்கு இளம்வீரர்கள் - இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து வியூகம்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு புதிய வீரர்களுடன் களம் இறக்கவுள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. 

டி20


விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வி்ளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கவுள்ளது.


இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள டி-20 நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த கேப்டன் கனே வில்லியம்ஸன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஜிம்மி நீஷத்துக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல் அழைக்கப்பட்டுள்ளார். மேலும், ஆல் ரவுண்டர் டேர்ல் மிட்செல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ப்ளைர் டிக்னர் ஆகியோரைப் புதிதாக அணியில் சேர்த்துள்ளது. இந்த இருவருக்கும் இதுதான் முதல் சர்வதேசத் தொடர். இதில் டிக்னெர் மூன்றாவது போட்டியில்தான் பெர்குசனுக்கு மாற்றாக அணியில் இணைந்துகொள்ளவுள்ளார். இருவரும் உள்ளூர்ப்போட்டிகளும் நியூஸிலாந்து A அணியிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது என்று நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

 

நியூஸிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோமே, லாக்கி பெர்குஷன் (முதல் இரு போட்டிகளுக்கு மட்டும்), மார்டின் கப்தில், ஸ்காட் குக்கலேஜின், டேர்ல் மிட்ஷெல், கோலின் முன்ரோ, மிட்ஷெல் சான்ட்னர், டிம் ஷீபர், இஷ் சோதி, டிம் சவுதி, ராஸ் டெய்லர், பிளையர் டிக்னர் (3-வது போட்டிக்கு மட்டும்).