`தனித் தீவு...டிரெக்கிங்...படகு சவாரி!’ - ஹாலிடே மோடில் விருஷ்கா #Virushka | Anushka sharma, virat kholi in new zealand Forest

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (02/02/2019)

கடைசி தொடர்பு:17:40 (02/02/2019)

`தனித் தீவு...டிரெக்கிங்...படகு சவாரி!’ - ஹாலிடே மோடில் விருஷ்கா #Virushka

விராட் கோலி

`அழகான இந்த இடம் எனது மனைவியால் இன்னும் அழகானது’ இது தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது கேப்டவுண் கடற்கரையில் விராட் கோலி உதிர்த்த வார்த்தைகள். கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அனுஷ்காவும் கோலியுடன் நியூசிலாந்து சென்றுள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கேப்டன் கோலிக்குக் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர் ஆகியவற்றிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோலி, தொடர்ந்து விளையாடி வருவதால் களைப்பாக இருக்கிறது. இந்த இடைக்கால விடுப்பில் நிம்மதியாக ஓய்வு எடுக்கப்போகிறேன் எனக் கூறினார்.

அனுஷ்கா ஷர்மா

இதனையடுத்து மனைவி அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட கோலி, `நாங்கள் வெளியேறுகிறோம்’ எனப் பதிவிட்டிருந்தார். அவர்களுக்குப் பின்னால் ஒரு சிறிய ரக விமானம் இருந்தது. இருவரும் ஒரு தனித்தீவில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. ஆனால், அந்த இடம் குறித்த தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை. அனுஷ்கா, கோலி இருவருமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்கள். காதல் மனைவியைக் கரம்பிடித்த பிறகு விராட், அவர் மீதான அன்பைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாவிலும் இந்த ஜோடியை ஏராளமானோர் ஃபாலோ செய்கிறார்கள். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி அனுஷ்கா தனது இன்ஸ்டாவில், `அமைதியான இயற்கையை நோக்கி நகர்கிறேன்’ எனப் பதிவிட்டிருந்தார். நியூசிலாந்தில் உள்ள ஒரு தீவுகளில் இவர்கள் இருப்பதாகவும். ட்ரெக்கிங், படகு சவாரி என விராட் விடுமுறையைக் கழித்து வருவதாகவும் கூறப்படுகிறது. அழகான கடற்கரையில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ஹார்டினுடன் விராட் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது.