‘இதுக்கு தான் பாஸ் தோனி வேணும்!’ - கொண்டாடும் நெட்டிசன்கள் | Behind the stump Dhoni is mass

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (03/02/2019)

கடைசி தொடர்பு:19:14 (03/02/2019)

‘இதுக்கு தான் பாஸ் தோனி வேணும்!’ - கொண்டாடும் நெட்டிசன்கள்

தோனி

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒரு நாள் இன்று நடைபெற்றது. இதில்  முதலில் பேட் செய்த இந்திய அணி 252 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இந்த வருடத்தின் தொடக்கம் முதலே அசத்திவரும் தோனி இன்றைய போட்டியில் இக்கட்டான சூழலில் களமிறங்கினார். 6 பந்துகளை எதிர்க்கொண்ட நிலையில் ட்ரெண்ட் பவுல்ட் பந்துவீச்சில் தோனி போல்ட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். இதனையடுத்து 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்குத் தொடக்கம் ஏமாற்றம் அளித்தாலும். வில்லியம்ஸன் - லாதம் ஜோடி நிதானமாக விளையாடியது.  இதனால் ரன்ரேட் உயர்ந்தது.

இந்த இணையை கேதர் ஜாதவ் வெளியேற்றினார். இவரது பந்துவீச்சில் வில்லியம்ஸன் தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேற்றினார். சிறிது நேரத்தில் சாஹல் பந்துவீச்சில் லாதம் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். களத்தில் நீஷம் மட்டும் மிரட்டிக்கொண்டிருந்தார். சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிக்கொண்டிருந்தார். இந்தசூழ்நிலையில் தான் கேதர் ஜாதவை பந்துவீச ரோகித் அழைத்தார். 37வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சாண்டர் ஒரு ரன் எடுக்க. இரண்டாவது பந்தை நீஷம் எதிர்கொண்டார். பந்து பேட்டில் படாமல் பேடில் பட்டது .

ரன் அவுட்

இதனையடுத்து தோனி, கேதர் ஜாதவ் ஆகியோர் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தனர். பந்து தோனிக்கு சற்று தொலைவில் இருந்ததை கவனித்த ரன் எடுக்க நீஷம் முயற்சி செய்தார். ஆனால் எதிர்தரப்பில் இருந்த சாண்டர் வேண்டாம் என செய்கை செய்தார். நீஷம் திரும்பி பேட்டை கீரீஸுக்குள் வைக்கும் போது ஸ்டெம்புகள் சிவப்பு நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது. தோனி அதற்குள் தன் மாயாஜாலத்தைக் காட்டி இருந்தார். இந்திய ரசிகர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த நீஷம் நடையைக் கட்டினார். 

கிரிக்கெட்


இந்தவீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள  இந்திய ரசிகர்கள்,  ‘இது ஒன்றே போதும் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி தோனி ஏன் தேவை என்று. தோனி கீப்பிங் செய்யும் அந்தக்கேட்டை தாண்டலாமா” எனப் பதிவிட்டுள்ளனர். ஸ்டெம்புக்கு பின்னால் தோனி எப்போதுமே பேட்ஸ்மேன்களை அச்சுறுத்திக்கொண்டே தான் இருக்கிறார்.