`எங்க இடத்துல வந்து எங்களுக்கே பாடம் எடுத்துட்டாங்க!’ - நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் #NZvIND | They've taught us a few lessons in our own conditions - Williamson

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (03/02/2019)

கடைசி தொடர்பு:07:28 (04/02/2019)

`எங்க இடத்துல வந்து எங்களுக்கே பாடம் எடுத்துட்டாங்க!’ - நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் #NZvIND

இந்திய வீரர்கள் எங்களது இடத்தில் வந்து எங்களுக்கே பாடம் எடுத்து இருக்கிறார்கள் என நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேசியுள்ளார்.

வில்லியம்ஸன்

நியூசிலாந்தில் இந்தியக் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒரு நாள் இன்று நடைபெற்றது. இதில், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக அம்பாதி ராயுடுவும், தொடர் நாயகனாக முகமது ஷமியும் தேர்வு செய்யப்பட்டனர். 

தோனி

போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன், ``இன்றைய சூழல் சற்று சவாலானதாக இருந்தது. பந்துகள் அதிகம் இருந்தது ரன்ரேட்டும் எங்கள் கைகளை விட்டு அகலவில்லை. தவறான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். அம்பாதி ராயுடு அபாரமாக விளையாடி 90 ரன்களை எடுத்தார். இந்திய வீரர்கள் எப்படிப்பட்ட சூழலிலும் சிறப்பாக செயல்படுவார்கள் எனத் தெரியும். நாங்கள் பார்ட்டனர்ஷிப்பை அமைக்க தவறிவிட்டோம். இந்த தொடரில் அனைத்து கிரெடிட்களும் இந்திய வீரர்களை சேரும். அவர்கள் எங்கள் இடத்தில் வந்து எங்களுக்கு சில பாடங்களை கற்பித்துள்ளனர். தற்போதைய இந்திய அணி, உலகத்தரம்வாய்ந்த அணி; தொடரை வெல்ல முழுத்தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களிடமிருந்து பாடம் கற்றுள்ளோம். இந்தத்தொடர் முழுவதும் எங்களுக்கு அதிக அழுத்தம் இருந்தது” என்றார். 

அம்பாதி ராயுடு

ஆட்ட நாயகன் விருது பெற்ற அம்பாதி ராயுடு பேசுகையில், ``திறமையான பந்துவீச்சு கூட்டணிக்கு முன்பு விளையாடுவது கடினமாக இருந்தது. தொடக்கத்தில் நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் 30 ஓவர்கள் வரை விக்கெட்டை இழக்காமல் விளையாட வேண்டும் என முடிவு செய்து ஆடினோம். 50 ஓவரும் முழுமையாக விளையாட வேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. கடினமான சூழலில் தான் 4,5,6-வதாக விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்’’ எனப் பேசினார்.