``அவர் அப்படிப் பேசியது சர்ப்ரைஸாக இருந்தது!”- தோனியின் அட்வைஸ் குறித்து கேதர் ஜாதவ்  | Kedar Jadhav tweets about MS Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (04/02/2019)

கடைசி தொடர்பு:13:12 (04/02/2019)

``அவர் அப்படிப் பேசியது சர்ப்ரைஸாக இருந்தது!”- தோனியின் அட்வைஸ் குறித்து கேதர் ஜாதவ் 

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5-வது ஒருநாள் போட்டியின்போது தோனியின் அட்வைஸ் தனக்குப் பெரிய சர்ப்ரைஸாக இருந்ததாகத் தெரிவித்திருக்கிறார் கேதர் ஜாதவ். 

கேதர் ஜாதவ்

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது. நேற்று முடிவடைந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. 

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று வெலிங்டனில் நடைபெற்ற போட்டியின்போது தோனி, விக்கெட் கீப்பராக சிறப்பாகச் செயல்பட்டார். குறிப்பாக தோனி செய்த ரன் அவுட்டால் நீஷம் ஆட்டமிழந்தது பெரும் வைரல் ஆனது. பொதுவாக, பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது ஸ்டெம்புக்குப் பின்னால் நின்றுகொண்டு, ஐடியாக்கள் வழங்குவார். இந்திய அணியின் சஹால், குல்தீப், அஷ்வின் எனப் பலர் இதைத் தெரிவித்திருக்கின்றனர்.

தோனி


இந்திய அணியின் பகுதி நேரப் பந்துவீச்சாளரான கேதர் ஜாதவ் முன்னதாக ஒரு பேட்டியில்,  ``தோனி சொல்லும் இடத்தில் நான் பந்துவீசுவேன். அதுதான் எனது பந்துவீச்சின் ரகசியம்” என்றார். இதேபோன்று நேற்றும் கேதர் ஜாதவ், பந்துவீசும்போது வழக்கம்போல் தோனி அவரிடம் பேசிக்கொண்டிருந்தார். 

பொதுவாக, எதிரணிக்கு புரியக்கூடாது என்பதால், இந்திய வீரர்கள் இந்தியில் பேசுவார்கள். இந்தி தெரியாத பட்சத்தில், அருகில் சென்று ஆங்கிலத்தில் பேசுவார்கள். ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில் ஆட்டத்தின் 39-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசும்போது தோனி ஸ்டம்புக்குப் பின்னால் இருந்தே பேசினார். இந்தமுறை அவர், கேதர் ஜாதவின் தாய்மொழியான மராத்தி மொழியில் பேசினார்.  ``மீண்டும் மீண்டும் அதேபோன்று வீசாதே.... அவரின் விக்கெட்டை வீழ்த்து” என மராத்தியில் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகக் கேட்டது. 

டிவீட்

இதைத் தொடர்ந்து இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இது தொடர்பாக வெளியான செய்தியை ட்விட்டரில் ஷேர் செய்த கேதர் ஜாதவ்,  ``தோனி மராத்தியில் பேசியது உண்மையிலே பெரிய சர்ப்ரைஸ். வெளிநாட்டில் விளையாடினாலும் தோனி ஸ்டம்புக்குப் பின்னால் நின்றால், சொந்த ஊரில் விளையாடுவது போன்ற உணர்வு இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார். தற்போது கேதர் ஜாதவின் இந்த டிவீட் வைரல் ஆகி வருகிறது.