`முதல்முறையாக இணைந்து களமிறங்கும் சகோதரர்கள்!' - பந்துவீச்சைத் தேர்வு செய்த ரோஹித் ஷர்மா! | India have won the toss and have opted to field

வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (06/02/2019)

கடைசி தொடர்பு:12:54 (06/02/2019)

`முதல்முறையாக இணைந்து களமிறங்கும் சகோதரர்கள்!' - பந்துவீச்சைத் தேர்வு செய்த ரோஹித் ஷர்மா!

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

ரோஹித் ஷர்மா


நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய ரோஹித், `முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். வெற்றிகரமாக நாங்கள் பல போட்டிகள் சேஸிங் செய்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாவதாக விளையாடும்போது எப்படி ஆடுகிறோம் என்பதை இதன்மூலம் கண்டறிய முடியும். பிட்ச் அருமையாக உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் நிறைய பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரிஷப் பண்ட் மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

கிரிக்கெட்


ஒருநாள் தொடரை கைப்பற்றியது போல் டி-20 தொடரையும் இந்தியா கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த நியூஸிலாந்து அணி டி-20 தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கும் என்பதால், இந்தத்தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்திய வீரர்கள் விபரம்: ரோஹித் ஷர்மா, தவான், ரிஷப் பண்ட், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சஹால், கலீல் அஹமது.