மிரட்டிய குர்ணால்; கைகொடுத்த கலீல் அகமது - இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்கு! | New Zealand scored 158 runs

வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (08/02/2019)

கடைசி தொடர்பு:16:42 (08/02/2019)

மிரட்டிய குர்ணால்; கைகொடுத்த கலீல் அகமது - இந்திய அணிக்கு 159 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 158 ரன்களைச் சேர்ந்துள்ளது. 

கிரிக்கெட்

நியூஸிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி அணிக்கு டிம் சைஃபர்ட்- கோலின் முன்ட்ரோ இணை தொடக்கம் தந்தது. தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணையை 2-வது ஓவரில் பிரித்தார் புவனேஸ்குமார். எல்.பி.டபில்யூ முறையில் முன்ட்ரோ வெளியேற வில்லியம்சன் களத்தில் இறங்கினார். இந்திய அணியின் வீரர்களின் பந்து வீச்சில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். 

10 ஓவர்களிலே 4 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து, வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தது. மைதானத்துக்கு வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் நடையை கட்ட 20 ஓவர் முடிவில் 158 ரன்களை மட்டுமே சேர்த்த நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்தது. குர்ணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 1 விக்கெட்டையும், புவனேஸ்குமார் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.