`கோலி, பும்ரா, ராகுல் பேக்!’ - ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #INDvAUS | Team India for Australia series announced

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (15/02/2019)

கடைசி தொடர்பு:20:20 (15/02/2019)

`கோலி, பும்ரா, ராகுல் பேக்!’ - ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #INDvAUS

ஆஸ்திரேலியத் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்திய அணி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வரும் 24ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2வது டி20 போட்டி பெங்களூருவில் நடக்கிறது. டி20 தொடருக்குப் பின்னர் ஒருநாள் தொடர் மார்ச் 2-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்திலும், அடுத்தடுத்த போட்டிகள் நாக்பூர், ராஞ்சி, சண்டிகர் மற்றும் டெல்லி மைதானங்களில் நடைபெறுகின்றன. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி


இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் விராட் கோலி அணிக்குத் திரும்பியிருக்கிறார். அதேபோல், நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் சர்ச்சையால் வாய்ப்பை இழந்த கே.எல்.ராகுல் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் மயங்க் மார்க்கண்டேவுக்கு முதல்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 

டி20 தொடருக்கான இந்திய அணி: 

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா, விஜய் சங்கர், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரீத் பும்ரா, உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் மற்றும் மயங்க் மார்க்கண்டே. 

முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி: 

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிஷப் பன்ட், சித்தார்த் கவுல் மற்றும் கே.எல்.ராகுல். 

கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி:

விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பாதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்ப்ரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், யுஷ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி விஜய் சங்கர், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பன்ட்.


[X] Close

[X] Close