`நான் இன்னும் யுனிவெர்ஸ் பாஸ் தான்' - ஓய்வை அறிவித்து உருகிய கிறிஸ் கெய்ல்! | Chris Gayle has announced he will retire from ODIs after World Cup 2019

வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (18/02/2019)

கடைசி தொடர்பு:07:53 (18/02/2019)

`நான் இன்னும் யுனிவெர்ஸ் பாஸ் தான்' - ஓய்வை அறிவித்து உருகிய கிறிஸ் கெய்ல்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். 

கிறிஸ் கெய்ல்

`கிரிக்கெட் உலகின் அரக்கன்', ‘சிக்ஸ் மெஸின்' என அறியப்படும் ஒரே நபர் மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல். இவர் களத்தில் புகுந்தால் பந்துகள் நாலாபுறமும் பறக்கும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலேயே அதிரடி காட்டி வந்த கெய்ல், டி20 போட்டிகள் அறிமுகமான பிறகு வேற லெவலில் விளையாட ஆரம்பித்தார். குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில், இவர் விளையாடுவதைப் பார்க்கவே இப்போதும் தனிக்கூட்டம் உள்ளது. 

கெய்ல்

எந்தத் தொடருக்குச் சென்றாலும் இவருக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை தன் வசமாக்கி விடுவார். இவர் ஆட்டத்தைக் காண்பதற்காக மட்டுமே பல ஆயிரம் பேர் கூடுவர். கெய்ல் களத்துக்கு வந்தால் கேலரியில்தான் ஃபீல்டர்களுக்கு இடம் என்பதை தன் ஒவ்வோர் ஆட்டங்களிலும் நிரூபித்துக்கொண்டே வந்தார். சர்வதேச அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கெய்லுக்கு நல்ல ஆதரவு உண்டு. அதேநேரம் சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமல் வலம் வந்துகொண்டிருந்தார்.

கெய்ல்

இந்த நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக கிறிஸ் கெய்ல் தற்போது அறிவித்துள்ளார். இங்கிலாந்தில் மே மாதம் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஓய்வுபெறப் போவதாக கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 284 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெய்ல் 23 சதம், 49 அரைசதம் உட்பட 9727 ரன்களை சேர்த்து ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்துள்ளார். 

கெய்ல்

இதேபோல் ஒருநாள் போட்டிகளில் அதிக (23) சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்தவா்கள் பட்டியலில் முதல் இடம் என்ற சாதனையும் இவர் படைத்துள்ளார். அப்ரிடி 524 போட்டிகளில் விளையாடி 476 சிக்சர்களையும், கிறிஸ் கெய்ட் 443 போட்டிகளில் மட்டும் விளையாடி 476 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர். இருப்பினும் டி20 போட்டிகளில் அவர் இன்னும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓய்வு குறித்து பேசியுள்ள கெய்ல், ``நிச்சயமாக நான் இன்னும் யுனிவர்ஸ் பாஸாக இருக்கிறேன். அது எப்போதும் மாறாது. நான் இதைக் கல்லறைக்குச் செல்லும்போதும் எடுத்துக்கொள்வேன். 

கெய்ல்

வரவுள்ள உலகக் கோப்பைத் தொடர் தான் எனக்குக் கடைசி தொடர். இளைஞர்களுக்கு வழிவிட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்க விரும்புகிறேன். இனி இளைஞர்களின் பின்னால் இருந்து அவர்கள் செய்வதை வேடிக்கை பார்க்கலாம். இனி பந்தை துரத்துவதைப் போலவே வருங்கால இளைஞர்களுடனும் பழகுவேன். தற்போது நல்ல நிலையிலேயே இருக்கிறேன். எனது உடல் கட்டுக்கோப்பாகவே இருக்கிறது. இன்னும் என் சிக்ஸ்பேக்குக்காக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று கலகலப்பாக பேசினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close