`இப்படி நடக்கும் என நினைக்கவில்லை!' - ரெய்னா வருத்தம் | not expecting to be dropped - Suresh raina

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:08:00 (21/02/2019)

`இப்படி நடக்கும் என நினைக்கவில்லை!' - ரெய்னா வருத்தம்

ரெய்னா

Photo Credit: BCCI

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் மட்டுமே விளையாடுகிறது. இதனையடுத்து இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கிறது. மோசமான ஃபார்ம் காரணமாக இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட சுரேஷ் ரெய்னா, உள்ளூர் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார். மீண்டும் இந்திய அணியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ள முயன்றார். அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனாலும் அதற்கு அடுத்தடுத்த தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இளம்வீரர்களின் வருகை அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஃபார்ம் போன்ற விவகாரங்கள் ரெய்னாவின் என்ட்ரிக்குச் சிக்கலாக உள்ளது.

இதுகுறித்து மனம் திறந்துள்ள ரெய்னா, ``ஒரு நாள் போட்டிக்கு தேர்வாகாதது வருத்தம்தான். இதனை நான் எதிர்பார்க்கவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். இதில் யாரையும் குற்றம் சொல்வதற்கு இல்லை. நான் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸில் கவனமாக இருக்கிறேன். என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். நான் எந்த அணியில் விளையாடினாலும் அர்ப்பணிப்போடுதான் விளையாடுகிறேன். யார்தான் உலகக்கோப்பை இரண்டு முறை ஏந்த விரும்ப மாட்டார்கள்’’ எனப் பேசியுள்ளார்.


[X] Close

[X] Close