ஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல்! - ஜடேஜா அணியில் சேர்ப்பு | Hardik Pandya ruled out of Australia’s tour of India due to lower back stiffness.

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (21/02/2019)

கடைசி தொடர்பு:17:20 (21/02/2019)

ஆஸ்திரேலியத் தொடரில் காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா விலகல்! - ஜடேஜா அணியில் சேர்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து, காயம் காரணமாக இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா விலகியிருக்கிறார். அவருக்குப் பதிலாக, ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

ஹர்திக் பாண்ட்யா

Photo Credit: BCCI

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில், வரும் 24-ம் தேதி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 2-வது டி20 போட்டி பெங்களூருவில் நடக்கிறது. டி20 தொடருக்குப் பின்னர், ஒருநாள் தொடர் மார்ச் 2-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்திலும், அடுத்தடுத்த போட்டிகள் நாக்பூர், ராஞ்சி, சண்டிகர் மற்றும் டெல்லி மைதானங்களிலும் நடைபெற உள்ளன. 

ஜடேஜா

ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடருக்கான அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டிருக்கிறார். டி20 தொடரில் பாண்ட்யாவுக்கு மாற்று வீரர் யாரும் சேர்க்கப்படவில்லை.  
 


[X] Close

[X] Close