டி20 மோடில் புஜாரா! - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல் | Pujara slams maiden T20 century

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (21/02/2019)

கடைசி தொடர்பு:20:36 (21/02/2019)

டி20 மோடில் புஜாரா! - 61 பந்துகளில் சதமடித்து அசத்தல்

புஜாரா

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா. இவரது ஆட்டத்திறன் காரணமாகவே ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் இடம் கிடைக்காமல் வந்தது. ஐபிஎல் போட்டிகளில் கூட 2014-ம் ஆண்டிற்குப் பிறகு எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்கவில்லை. அதிரடி.. ஆக்ரோஷம் எனப் பழக்கப்பட்ட டி-20 போட்டிகளுக்கு புஜாரா சரிப்பட்டு வரமாட்டார் எனத் தேர்வாளர்கள் அவரை டிக் செய்வதில்லை. இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிக்கொண்டிருப்பார். 

சையத் முஷ்டாக் அலி ட்ராபி டி-20 தொடரில் புஜாரா செளராஷ்ட்ரா அணிக்காக விளையாடி வருகிறார். இந்தூரில் நடைபெற்ற போட்டியில் செளராஷ்ட்ரா - ரயில்வே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரயில்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி புஜாரா - ஹர்விக் தேஷாயி ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெடுக்கு 85 ரன்களை குவித்தது. ஹர்விக் தேஷாயி 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் வழக்கத்துக்கு மாறாக புஜாரா அதிரடியில் மிரட்டினார் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவருக்கு ராபின் உத்தப்பா நன்கு ஒத்துழைப்பு அளித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடியவர் 61 பந்துகளில் சதமடித்தார். டி-20 கிரிக்கெட் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும். செளராஷ்ட்ரா அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ரயில்வே அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டு இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 


[X] Close

[X] Close