9 டக் அவுட்... அடிச்சது 6 ரன்... கொடுத்தது 5 வைடு - டி20 கிரிக்கெட்டில் வித்தியாசமான சாதனை | Mizoram T20 cricket team incurs 9 ducks

வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (22/02/2019)

கடைசி தொடர்பு:16:28 (22/02/2019)

9 டக் அவுட்... அடிச்சது 6 ரன்... கொடுத்தது 5 வைடு - டி20 கிரிக்கெட்டில் வித்தியாசமான சாதனை

 

கிரிக்கெட்

டி-20 கிரிக்கெட் போட்டிகள் அதிரடிக்குப் பெயர்போனது. குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டி என்பதால், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும். உள்ளூர் மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரியில் நடைபெற்ற ஆட்டத்தில், மிசோரம் மற்றும் மத்தியப்பிரதேசம் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் மிசோரம் அணி முதலில் பேட்டிங் செய்தது. மத்தியப்பிரதேச வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

மிசோரம் அணி 13.5 ஓவர்களில் 9 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் 9 வீராங்கனைகள் ரன் கணக்கைத் தொடங்காமல் வெளியேறினர். மிசோரம் அணிக்காக அபூர்வா பரத்வாஜ் 25 பந்துகளை எதிர்க்கொண்டு 6 ரன்களை எடுத்தார். நீண்ட நேரம் களத்தில் இருந்தவர் ஆறுதலாக ஒரு பவுண்டரி விளாசினார். இந்தப் போட்டியில், மத்தியப்பிரதேச  பந்துவீச்சாளர்கள் 3 வைடுகளைத் தானமாக வழங்கினர். மத்தியப்பிரதேச அணி 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியது. 

எளிய இலக்கை நோக்கி விளையாடிய மத்தியப்பிரதேச அணி, ஒரே ஓவரில் வெற்றிபெற்றது. டி-20 கிரிக்கெட் வரலாற்றில் இதுமிகப்பெரிய வெற்றியாகும். மிசோரம் அணிக்காகப் பந்துவீசிய அபூர்வா பரத்வாஜ், 5 வைடுகளைத் தாராளமாக வழங்கினார். இந்தப் போட்டியில், ஒரே ஒரு பவுண்டரி தான் அடிக்கப்பட்டது. அதுவும் மிசோரம் அணிக்காக அபூர்வா அடித்தது. மகளிர் கிரிக்கெட்டியில் குறைந்த ஸ்கோர் பதிவாவது இதுமுதல் முறையல்ல. இதற்கு முன்பாக மணிப்பூர் அணி முழுவதுமாக 20 ஓவர்கள் விளையாடி, 9 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்தது.


[X] Close

[X] Close