உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதுமா இந்தியா? - விராட் கோலி பதில்! | Virat Kohli talk about wcc 2019 cricket

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (23/02/2019)

கடைசி தொடர்பு:17:54 (23/02/2019)

உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதுமா இந்தியா? - விராட் கோலி பதில்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது குறித்து மனம் திறந்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. 

விராட் கோலி

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தற்கொலைப்படையினர் நடந்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்துக்கு ஜெய்ஸி-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் தாக்குதல் தொடர்பாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கு இந்திய அளவில் பெரும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. தவிர, உலக நாடுகளும் தாக்குதலுக்கு கண்டனங்களை தெரிவித்தன. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலித்தன.

பிசிசிஐ

 

புல்வாமா தீவிரவாதத் தாக்குதலின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 200 சதவிகிதம் வரி விதித்து மத்திய அரசு அதிரடி காட்டியது. மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடைபெறும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று, ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பி.சி.சி.ஐ. அமைப்பு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முதலாவது டி20 கிரிக்கெட் விசாகப்பட்டினத்தில் நாளை தொடங்குகிறது. இதில் பங்கேற்க வந்த கேப்டன் கோலியிடம் செய்தியாளர்கள் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து கேட்டனர். அதற்கு அவர், ``பயங்கரவாத தாக்குதலில் வீரரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் துணை நிற்போம். இந்திய அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் முடிவை நாங்கள் மதிப்போம்'' என்றார்.


[X] Close

[X] Close