கே.எல்.ராகுல் ரிட்டர்ன்ஸ் - புதுமுக வீரருடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் காணும் இந்தியா! | Aus won the toss elect to bowl

வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (24/02/2019)

கடைசி தொடர்பு:18:54 (24/02/2019)

கே.எல்.ராகுல் ரிட்டர்ன்ஸ் - புதுமுக வீரருடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் காணும் இந்தியா!

இந்தியா

 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இரண்டு டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இந்த தொடர் அமையவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான சில போட்டிகளில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ளார். ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். 

இந்தப்போட்டியின் மூலம் இளம்வீரர் மயங்க் மார்கண்டே சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைக்கிறார். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய மார்கண்டே 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி-20 தொடர் சமனில் முடிந்தது. இந்தாண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. எனவே அதற்கு பழித்தீர்க்கும் வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் விளையாடுவது. ஐபிஎல் போட்டிகள் மூலம் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு விசாகப்பட்டினம் பிட்ச் பரிட்சயம் ஆனது தான். எனவே இந்தப்போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது. இந்திய அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். விராட் கோலி இந்தப்போட்டியில் 12 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக டி-20 கிரிக்கெட் 500 ரன்களை எடுத்த வீரர் என்ற சிறப்பை பெறுவார்.


இந்திய வீரர்கள் விவரம்: ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல். விராட் கோலி, ரிஷப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், க்ருணல் பாண்ட்யா, உமேஷ் யாதவ், சாஹல், மயங்க் மார்க்கண்டே, பும்ரா’


போட்டி குறித்து பேசிய இந்தியக்கேப்டன் விராட் கோலி கூறுகையில்,  இந்தப்போட்டியில் முதலில் பந்துவீச வேண்டும் என நினைத்திருந்தோம். பேட்டிங் செய்வதற்குச் சிறப்பான ஆடுகளம் இது. இந்தப்போட்டியில் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது அவருக்கு பதிலாக ராகுல் அணியில் இடம்பெறுகிறார். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக உமேஷ் யாதவ் ஆடுகிறார். மயங்க் மார்க்கண்டே இந்தப்போட்டியில் அறிமுகமாகிறார் என்றார்.


[X] Close

[X] Close