`உங்கள் எதிரி எங்களுக்கும் எதிரிதான்!’ - இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள் | Wasim Akram has a message for India

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (28/02/2019)

கடைசி தொடர்பு:17:48 (28/02/2019)

`உங்கள் எதிரி எங்களுக்கும் எதிரிதான்!’ - இந்தியாவுக்கு வாசிம் அக்ரம் வேண்டுகோள்

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் பால்கோட்டில் உள்ள தீவிரவாதிகள் முகாமை இந்திய ராணுவம் அழித்தது.

மேலும், நேற்று இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டு விமானப்படை விமானத்தை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுவீழ்த்தினர். அப்போது நடந்த மோதலில் இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தானில் உள்ள எல்லையோர கிராமத்தில் விழுந்துள்ளது. விமானத்தில் இருந்த விமானி அபிநந்தனும் பாகிஸ்தானில் சிக்கியுள்ளார். தற்போது அவர் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பாதுகாப்பாக உள்ளார். அவரை மீட்க இந்தியா தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வாசிம் அக்ரம்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் உருவாகும் அபாயம் உள்ளதால் போர் வேண்டாம், அமைதி வேண்டும் என இரு மக்களும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதே கருத்தை உலக தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம், ‘கனத்த இதயத்துடன் நான் உங்களிடம் வேண்டுகிறேன். இந்தியா, பாகிஸ்தான் உங்களின் எதிரி நாடு இல்லை. உங்களின் எதிரி எங்களுக்கும் எதிரிதான். போரினால் எவ்வளவு ரத்தம் சிந்தப்போகிறது என்பதற்கு முன்னால் நாம் இருவரும் ஒரே மண்ணில்தான் போர் புரியப்போகிறோம் என்பதை உணர வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போரை நாம் வெல்ல வேண்டும் என்றால் நமக்குச் சகோதரர்கள் தேவை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 


[X] Close

[X] Close