``டிராவிட்டுடன் உரையாடிய தருணம்” -மீண்டும் ஃபார்முக்கு வந்ததுகுறித்து நெகிழும் ராகுல்  | KL rahul shares about dravid

வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (02/03/2019)

கடைசி தொடர்பு:11:21 (02/03/2019)

``டிராவிட்டுடன் உரையாடிய தருணம்” -மீண்டும் ஃபார்முக்கு வந்ததுகுறித்து நெகிழும் ராகுல் 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல், தான் ஃபார்முக்குத் திரும்பியது தொடர்பாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்.    

ராகுல்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் தனது ஃபார்முக்குத் திரும்பியுள்ளார். வெளிநாட்டுத் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்த ராகுல், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இது தொடர்பான விசாரணைக்குப் பின்னர், ராகுல் மீண்டும் அணியின் தேர்வாகியுள்ளார். இடைப்பட்ட காலத்தில், அவர் இந்திய ஏ அணிக்காக விளையாடிவந்தார். இந்நிலையில், தற்போது அவர் ஃபார்முக்குத் திரும்பியது குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.

இரண்டாவது டி 20 போட்டிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல்.  ``இந்திய அணியில் இல்லாத காலகட்டம் உண்மையிலே  கடினமானதுதான். ஒரு நபராகவும், வீரராகவும் அனைவரும் இதனைச் சந்தித்து ஆக வேண்டும். அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம்.  

டிராவிட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. அதை முறையாகப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் இந்திய அணிக்கு வந்து சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில், இந்தியா ஏ அணிக்காக சில போட்டிகளில் விளையாடினேன். 
அப்போது, ராகுல் டிராவிட் உடன் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. எனது ஆட்டம் குறித்தும் கிரிக்கெட் குறித்தும் நிறையப் பேசினோம்.

அந்த 5 போட்டிகளிலும், அவர் எனக்கு நிறைய உதவிகள் செய்தார். நான் ஃபார்முக்குத் திரும்புவதற்கு அது மிகவும் உதவிகரமாக இருந்தது.  தற்போது, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். ராகுல் டிராவிட் இந்தியா ஏ மற்றும் 19 -வயதுக்குட்பட்டோருக்கான அணிகளுக்குப் பயிற்சியாளராக உள்ளார்.  
 


[X] Close

[X] Close