`ஆரோன் பின்ச்சுக்கு கைகொடுக்காத 100வது போட்டி - டக் அவுட் ஆன சோகம் | bumrah Takes australian skipper Aron Finch

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (02/03/2019)

கடைசி தொடர்பு:15:52 (02/03/2019)

`ஆரோன் பின்ச்சுக்கு கைகொடுக்காத 100வது போட்டி - டக் அவுட் ஆன சோகம்

ஆரோன் பின்ச்

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி-20 கிரிக்கெட் போட்டியை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. டி-20 கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் அதிரடியால் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது. இதையடுத்து, ஒரு நாள் கிரிக்கெட்டில் 4-வது இடத்தில் இறங்கி விளையாட விருப்பம் தெரிவித்தார். இதுதொடர்பா பேசிய அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மேக்ஸ்வெல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அவர் கேட்டது கிடைக்கும் என்றார். இருப்பினும் தொடர்ந்து சொதப்பி வரும் ஆரோன் ஃபின்ச்க்கு ஆதரவாகவே லாங்கர் பேசினார். அவர் ஒரு திறமையான வீரர் ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார் என்றார்.


இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டி ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆரோன் ஃபின்ச் விளையாடும் 100-வது போட்டியாகும். இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது பேசியவர், ஒரு நாள் நாங்கள் கடந்த 5 மாதங்களாகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம் இந்தப் போட்டியில் மிகப்பெரிய ஸ்கோரை எடுப்போம் என்றார். ஆனால், பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் ரன் கணக்கைத் தொடங்காமல் நடையைக்கட்டினார் ஃபின்ச். இது அவருக்கு 100-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியாகும். கடந்த 20 போட்டிகளில் ஃபின்ச் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. இவர் இந்தக் காலகட்டத்தில் அதிகபட்சமாக 47 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஃபின்ச் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஸ்மித் -வார்னர்  இல்லாததால் இவருக்கு கடந்த ஓராண்டாக வாய்ப்பு கிடைத்தாகவும் உலகக்கோப்பை போட்டியில் நிச்சயம் இவர் இடம் பெறப் போவதில்லை என தங்களது ஆதங்கத்தைச் சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.


[X] Close

[X] Close