`இது என்ன முட்டாள்தனமான யோசனை!' - ரவி சாஸ்திரியை விளாசும் அஜித் அகர்கர்! | Pushing Virat Kohli to number 4 would be silly says Ajit Agarkar

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (04/03/2019)

கடைசி தொடர்பு:12:15 (04/03/2019)

`இது என்ன முட்டாள்தனமான யோசனை!' - ரவி சாஸ்திரியை விளாசும் அஜித் அகர்கர்!

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஐடியாவை முன்னாள் வீரர் அஜித் அகர்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ரவி சாஸ்திரி

அண்மையில் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உலகக்கோப்பை குறித்து பேசினார். அதில், ``உலகக்கோப்பை போட்டிகளின்போது தேவைக்கேற்ப அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றியமைக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. இவை போட்டிகளின்போது முடிவு செய்யப்படும்" எனக் கூறியிருந்தார். இவரின் இந்தக் கருத்தை அடுத்து, உலகக்கோப்பையில் கேப்டன் கோலி நான்காவது வீரராகக் களமிறக்கப்படலாம் என்று விவாதம் கிளம்பி வந்தது. அதேபோல் தோனி அதற்கு அடுத்து ஐந்தாவது வீரராகவோ அல்லது ஆறாவது வீரராகவோ களமிறக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது. 

கோலி

இந்த நிலையில், அணி நிர்வாகத்தின் இந்த ஐடியாவை முன்னாள் இந்திய பந்துவீச்சாளர் அஜித் அகர்கர் கடுமையாகச் சாடியுள்ளார்.  இதுகுறித்து கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``இது என்ன முட்டாள்தனமான யோசனை. புள்ளி விவரம் கூறுவதை வைத்துப் பாருங்கள். கோலியைப் பொறுத்தவரை மூன்றாவது வீரராகக் களமிறங்கிதான் 32 சதங்கள் விளாசியுள்ளார். ஆம், நான்காவது வீரராக இறங்கியும் நன்றாக விளையாடியுள்ளார் தான். ஆனால், அவர் நான்காவது வீரராகக் களமிறங்கக் கூடாது. கோலி  தற்போது செய்துள்ள சாதனைகள் எல்லாம் இந்த பேட்டிங் ஆர்டரில் இறங்கிச் செய்ததுதான். 

அஜித் அகர்கர்

அவரது மகத்துவமே ஒன் டவுனில் இறங்கிச் சிறப்பாக ஆடுவதுதான். அப்படி இருக்கையில் அவரை வேற பேட்டிங் ஆர்டரில், அதுவும் வழக்கமாக ஆடுவதை விடக் கீழ் நிலையில் இறங்கி ஆடச் சொல்வது சரியானது அல்ல. என்னைப் பொறுத்தவரை இது ஒரு முட்டாள்தனமான யோசனைதான். நான்காவது வீரராகக் களமிறங்கி அவர் சிறப்பாக ஆடலாம். ஆனால், முதல் மூன்று வீரர்களின் ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றியைத் தீர்மானித்து வருகிறது. மிடில் ஆர்டர்தான் சொதப்பி வருகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close