`விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவது மகிழ்ச்சி!’ - ஆடம் ஜாம்பா | It's nice to get players like Virat Kohli out: Adam Zampa

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (05/03/2019)

கடைசி தொடர்பு:08:00 (05/03/2019)

`விராட் கோலி விக்கெட்டை வீழ்த்துவது மகிழ்ச்சி!’ - ஆடம் ஜாம்பா

ஆடம் ஜாம்பா

ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. டி-20 தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டித்தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தோனி, கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா அணி வெற்றிபெற்றது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா இரண்டு முறை அவுட்டாகியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டி மற்றும் ஹைதராபாத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் கோலியின் விக்கெட்டை இவர் வீழ்த்தினார். இதுகுறித்து பேசியுள்ள ஆடம் ஜாம்பா, ``விராட் கோலி போன்ற வீரரை தொடர்ந்து அவுட்டாக்குவது மகிழ்ச்சியான விஷயம். இந்தப் போட்டிகளில் விராட் அவுட்டானது பெரிய நிம்மதியைக் கொடுத்தது. பிரிஸ்பேன் மற்றும் விசாகப்பட்டினத்தில் நாங்கள் பெற்ற வெற்றிக்குக் கோலியின் விக்கெட் வீழ்த்தியது முக்கிய காரணமாக அமைந்தது. தோனி, ரோஹித் ஷர்மா எனப் பெரிய பேட்டிங் பட்டாளமே இருக்கிறது. இந்திய அணியில் 6 முதல் 7 பெரிய விக்கெட்டுகள் இருக்கிறது. ஒரு நாள் போட்டிகளில் லெக் ஸ்பின்னர்கள், ஸ்டெம்பை குறிவைத்து பந்து வீசுகிறார்கள் நானும் அதையே பின்பற்றுகிறேன் அதை என் பலமாகக் கருதுகிறேன். இந்தப் போட்டியில் விராட் கோலி, கேதர் ஜாதவ் ஆகியோருக்கு ஸ்டெம்புக்கு வெளியே பந்து வீசினால் அது எனக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்றார்.


[X] Close

[X] Close