500-வது வெற்றியைப் பதிவு செய்யுமா இந்தியா? -நாக்பூர் போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சு | India on the verge of registering 500 ODI wins

வெளியிடப்பட்ட நேரம்: 13:08 (05/03/2019)

கடைசி தொடர்பு:14:24 (05/03/2019)

500-வது வெற்றியைப் பதிவு செய்யுமா இந்தியா? -நாக்பூர் போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சு

இந்தியா

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிகெட் அணி டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. 

கிரிக்கெட்

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் ஃபின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டில் இந்திய அணி வெற்றிபெற்றால் அது ஒரு நாள் கிரிக்கெட்டில் பெறும் 500-வது வெற்றியாகும். இதுவரை இந்திய அணி 962 ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளது. இதில் இந்தியா 499 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிரணியினர் 414 போட்டிகளிலும், 9 போட்டிகள் டிராவிலும், 40 போட்டிகளில் எந்த முடிவு எட்டப்படாமலும் முடிவுக்கு வந்துள்ளது. இன்றைய போட்டியில் கோலி இந்திய அணிக்கு 500-வது வெற்றியைப் பெற்றுத்தருவாரா என எதிர்பார்த்து ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. இதுவரை இவ்விரு அணிகளும் 132 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் இந்தியா 48 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 10 போட்டிகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.


[X] Close

[X] Close