மைதானத்தில் நுழைந்த ரசிகருக்குப் போக்குக்காட்டிய தோனி! - வைரல் வீடியோ | MS Dhoni chased around by pitch invader in Nagpur,

வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (05/03/2019)

கடைசி தொடர்பு:20:39 (05/03/2019)

மைதானத்தில் நுழைந்த ரசிகருக்குப் போக்குக்காட்டிய தோனி! - வைரல் வீடியோ

 

தோனி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ஃபீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களைக் குவித்தது. இதில் கோலி 120  பந்துகளில் 116 ரன்களைக் குவித்து அசத்தினார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது அவரது 40வது சதமாகும். அணியின் மிடில் ஆர்டர் கைகொடுக்காததால் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. கடந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த தோனி, இந்த ஆட்டத்தில் ரன் ஏதும் சேர்க்காமல் டக் அவுட் ஆனார்.

இதனிடையே ரசிகர்கள் பலர் கடுமையான பாதுகாப்புகளையும் மீறி மைதானத்தில் நுழைந்து வீரர்களைக் கட்டிப்பிடித்து வாழ்த்துவது அவ்வப்போது நிகழும். அந்த வகையில், இந்திய அணி ஃபீல்டிங் செய்யக் களமிறங்கியபோது மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் தோனியைக் கட்டிபிடிக்க முயன்றார். ஆனால், தோனி தனக்கே உரித்தான பாணியில், ரசிகரிடம் விளையாடும் வகையில், அவரிடமிருந்து நழுவி ஓடினார். தொடர்ந்து ரசிகர் துரத்த, ஸ்டம்புக்கு அருகில் சென்று நின்றுகொண்டார். இதையடுத்து அவரை கட்டியணைத்தார் அந்த ரசிகர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

 

 

 


[X] Close

[X] Close