`என் வீட்டை நானே எப்படித் திறந்து வைக்க முடியும்?' - ராஞ்சி நிர்வாகிகளை நெகிழ வைத்த தோனி! | MS Dhoni declines to inaugurate the ‘Dhoni Pavilion’ in ranchi

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (07/03/2019)

கடைசி தொடர்பு:23:00 (07/03/2019)

`என் வீட்டை நானே எப்படித் திறந்து வைக்க முடியும்?' - ராஞ்சி நிர்வாகிகளை நெகிழ வைத்த தோனி!

தனது சொந்த ஊரான ராஞ்சி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை தோனி நெகிழ வைத்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தோனி

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம் ஒருநாள் தொடரில் முதல் வெற்றியைப் பெறுவதற்கு ஆஸ்திரேலிய அணியும் தீவிர பயிற்சி எடுத்து வருகிறது. நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ராஞ்சி சென்றுள்ளனர்.

இதற்கிடையே, ராஞ்சி மகேந்திர சிங் தோனியின் சொந்த ஊர் ஆகும். தோனியின் சாதனைகளை போற்றும் வகையில் ராஞ்சி மைதானத்தின் ஒரு பெவிலியனுக்கு தோனியின்  பெயரை சூட்டியுள்ளது ராஞ்சி கிரிக்கெட் சங்கம். இந்த பெவிலியனை திறந்து வைக்க வேண்டும் என ராஞ்சிக்கு வந்துள்ள தோனியிடம் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தோனி, ``நானும் இந்த மைதானத்தின் ஒரு அங்கம்தான். எனது சொந்த வீட்டை நானே எப்படித் திறந்து வைக்க முடியும்" எனக் கூறியுள்ளார். இதைக் கேட்ட நிர்வாகிகள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

ராஞ்சி

இது குறித்து ராஞ்சி கிரிக்கெட் சங்க நிர்வாகி சக்கரபோர்டி, ``அவர் திறந்து வைத்தார் என்றால், அவர் இந்த மைதானத்தின் ஒரு அங்கம் இல்லை என்று அவரை உணரச் செய்யும். அதனால் தான் மறுத்துவிட்டார். இது அவரது நன்னடத்தையைக் காட்டுகிறது. நானும் ஒரு அங்கம் என அவர் கூறியுள்ளதன் மூலம் எங்களுக்கு,  மைதானத்துக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்துள்ளார். அவர் இன்னும் அடக்கமான மனிதராகவே இருக்கிறார். அவர் மாறவேயில்லை" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close