பி.சி.சி.ஐ ஊதியப் பட்டியல் - சீனியர்களுக்கு ஷாக் கொடுத்த ரிஷப் பன்ட்! #BCCI | BCCI released Annual Player Contracts

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (08/03/2019)

கடைசி தொடர்பு:10:20 (08/03/2019)

பி.சி.சி.ஐ ஊதியப் பட்டியல் - சீனியர்களுக்கு ஷாக் கொடுத்த ரிஷப் பன்ட்! #BCCI

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வீரர்களை நான்கு பிரிவுகளாக பிரித்து பி.சி.சி.ஐ ஊதியம் வழங்கி வருகிறது. அதன்படி ஏ ப்ளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது. ஏ ப்ளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு 7 கோடியும், ஏ பிரிவில் உள்ளவர்களுக்கு 5 கோடியும், அதற்கடுத்த பிரிவுகளில் உள்ளவர்களுக்கு அதைவிடக் குறைவாகவும் ஊதியம் வழங்கப்பட்டு வருகின்றது. இதுபோக ஒவ்வோர் ஆட்டத்துக்கும் தனித்தனியாக வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்திய வீரர்கள்

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஊதியப் பட்டியலை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஏ ப்ளஸ் பிரிவில் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தப் பிரிவில் ஐந்து பேர் இடம்பெற்ற நிலையில், இந்த ஆண்டு மூன்று பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் திடீரென ஏ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் அஸ்வின், புஜாரா, தோனி, ரவீந்திர ஜடேஜா, ரஹானே, தோனி, ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் யாரும் எதிர்பாராத வகையில் ரிஷப் பன்ட் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளார். கடந்த சில காலமாகவே அணியில் இடம்பிடித்து வருவதுடன் சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தி வருவதால் ரிஷப் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

ரிஷப் பான்ட்

இதேபோல் பி பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், சஹால், ஹர்டிக் பாண்டியாவும், சி பிரிவில் கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, ஹனுமா விகாரி, கலீல் அகமது, விருத்திமான் சஹா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே கே.எல். ராகுல், உமேஷ் யாதவ், பாண்ட்யா உள்ளிட்ட வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி ரிஷப் பான்ட் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close