``MSD" -தல தோனியை குறிப்பிட்டு மில்லரை பாராட்டிய டுப்பெளஸ்ஸிஸ் #ViralVideo | SA captain praises miller as MSD

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (08/03/2019)

கடைசி தொடர்பு:13:40 (08/03/2019)

``MSD" -தல தோனியை குறிப்பிட்டு மில்லரை பாராட்டிய டுப்பெளஸ்ஸிஸ் #ViralVideo

இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது ஒருநாள்போட்டி தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டியானது கடந்த புதன் அன்று சென்சூரியனில் நடைபெற்றது

தென்னாப்பிரிக்கா இலங்கை

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 70 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். 

பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணை 138 ரன்களுக்கு சுருண்டது.  இதன்மூலம் தென்னாப்பிரிக்கா அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலை பெற்றது. இலங்கை அணி, 9 விக்கெட்டுகளை இழந்து திணறியபோது டி காக், ஓய்வு எடுக்க பெவிலியன் திரும்பினார். இதன் காரணமாக, களத்தில் மின்னல் வேகத்தில் ஃபீல்டிங் செய்யும் மில்லர் விக்கெட் கீப்பர் பணியை கையில் எடுத்தார், ஆட்டத்தின் 32 -வது ஓவரை இம்ரான் தாஹிர் வீச, அந்த ஓவரில் 4-வது பந்து பேட்ஸ்மேன் அடித்து ஆட முயன்றார். ஆனால், பந்து பேட்டில் படாமல் கீப்பர் மில்லரிடம் சென்றது. 

ஸ்டெம்பிங்

அவரும் உடனடியாக ஸ்டெம்பிங் செய்ய முயன்றார். ஆனால், பேட்ஸ்மேன், க்ரீஸுக்கும் திரும்பிவிட்டதால், தப்பித்தார். இந்த ஸ்டெம்பிங்கை முதல் ஸ்லிப்பில் இருந்து கவனித்த கேப்டன் டுப்பெளஸ்ஸிஸ், எம்.எஸ்.டி(MSD) என்றார். அதாவது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியை தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

டுப்பெளஸ்ஸிஸ்


தோனி மின்னல் வேக ஸ்டெம்பிக்கு பெயர் பெற்றவர். தோனி ஸ்டெம்புக்குப் பின்னால் நின்றால் பேட்ஸ்மேன்கள், க்ரீஸுக்குள்ளேதான் இருப்பார்கள். வெளியே செல்ல வேண்டும் என நினைத்தாலெ ஸ்டெம்பிங் செய்யும் அளவுக்கு கில்லாடி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான டுப்பெளஸ்ஸிஸ் , மில்லரின் ஸ்டெபிங்கைப் பாராட்டும் விதமாக தோனியை ஒப்பிட்டுச் சொல்லும் வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.  

 

 

 


[X] Close

[X] Close