ஆர்மி தொப்பியுடன் வீரர்கள் - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு | 3rd ODI between India and Australia

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (08/03/2019)

கடைசி தொடர்பு:13:26 (08/03/2019)

ஆர்மி தொப்பியுடன் வீரர்கள் - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்துள்ளது

ராஞ்சி

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிகெட் அணி டி-20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி - கேதர் ஜாதவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. 

தொப்பி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி நிமிடத்தில் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் இன்று தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் மூன்றாவது ஒருநாள் போட்டியானது நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வென்று 3-0 எனத் தொடரை வெல்ல இந்தியா முனைப்புக்காட்டி வருகிறது. இதன் மூலம் டி20 தொடரை இழந்ததுக்கு பதிலடி கொடுக்க முடியும் என இந்திய ரசிகர்களும் நினைக்கின்றனர். 

இன்றைய போட்டி ராஞ்சி ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். 17,000 சர்வதேச ரன்களை தோனி நெருங்கியுள்ளார். இந்தச் சாதனையைப் படைக்க அவருக்கு இன்னும் 33 ரன்கள்தான் தேவை. இந்தச் சாதனையை அவர் தன் சொந்த ஊரில் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தப் போட்டி தோனி சொந்த ஊரில் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என்கின்றனர். 

கோலி

photo:Hotstar

இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் ஆர்மி தொப்பிகளுடன் களமிறங்குகின்றனர். புல்வாமா தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பலியான குடும்பத்தினருக்கு மக்கள் உதவ வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் ஆர்மி தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்துள்ளனர். இந்தப் போட்டிக்கான ஊதியத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிதியாக வழங்கவுள்ளனர். வீரர்களுக்கு ஆர்மி தொப்பியை தோனி வழங்கினார். 

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற அணி கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  


[X] Close

[X] Close