மொத்தம் 41; சேஸிங்கில் 25 - சொந்த மண்ணில் சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி | Virat Kohli Hits 41st odi Century

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (08/03/2019)

கடைசி தொடர்பு:20:52 (08/03/2019)

மொத்தம் 41; சேஸிங்கில் 25 - சொந்த மண்ணில் சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

விராட் கோலி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பே அதிர்ச்சி காத்திருந்தது. 4 ஓவரில் தவான் ஒரு ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படும் ரோஹித் இந்தத் தொடரில் தடுமாறி வருகிறார். இன்றைய போட்டியில் ரோஹித் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பாதி ராயுடுவும் கம்மின்ஸ் பந்துவீச்சில் க்ளீன் போல்டானார். 

கிரிக்கெட்

இதையடுத்து தோனி - கோலி இருவரும் அணியை மீட்கும் பொறுப்பில் விளையாடினர். தோனி 26 ரன்களில் க்ளீன் போல்டானார். இதையடுத்து கோலியுடன் கேதர் ஜாதவ் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர். கோலி தனது அரை சதத்தைக் கடந்தார். அடுத்து அதிரடியில் இறங்கிய கோலி வேகமாக ரன்களைச் சேர்ந்தார். இந்த நிலையில் கேதர் ஜாதவ் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 41 சதத்தை பூர்த்தி செய்தார். இதில் சேஸிங்கில் மட்டும் 25 சதங்களை அவர் அடித்துள்ளார்.

கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சிறப்பையும் கோலி பெற்றார். இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கோலி, இன்று பதிவு செய்தது, அவரது 5-வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் ஒரு நாள் போட்டியில் சச்சின் 4 சதங்களைப் பதிவு செய்துள்ளார். இந்தச் சாதனையைக் கோலி முறியடித்துள்ளார். மேலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் சச்சின் 9 சதங்களை (71 போட்டிகளில்) அடித்து முதலிடத்தில் உள்ளார். தற்போது கோலி 8 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் ஷர்மா 7 சதத்துடன் ( 31 போட்டிகளில்)  மூன்றாவது இடத்தில் உள்ளார். சிறப்பாக விளையாடிய கோலி 123 ரன்களில் ஆட்டமிழந்தார். சற்றுமுன்னர் வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பு 219 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இந்திய அணி வெற்றிப்பெற இன்னும் 95 ரன்கள் எடுக்க வேண்டும்.


[X] Close

[X] Close