`கவாஜா முதல் சதம்; ஜாம்பா சுழல் ஜாலம்!’ - ராஞ்சியில் வென்ற ஆஸ்திரேலியா #INDvAUS | Australia wins 3rd odi by 32 runs

வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (08/03/2019)

கடைசி தொடர்பு:21:52 (08/03/2019)

`கவாஜா முதல் சதம்; ஜாம்பா சுழல் ஜாலம்!’ - ராஞ்சியில் வென்ற ஆஸ்திரேலியா #INDvAUS

இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஜாம்பா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸை ஆரோன் ஃபின்ச் - உஸ்மான் கவாஜா தொடங்கினர். முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி பின்னர் விஸ்வரூபம் எடுத்தனர். 30 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 186 ரன்கள் எடுத்திருந்தது. 

கேப்டன் ஆரோன் ஃபின்ச் - கவாஜா இருவரும் அரைசதம் கடந்து விளையாடிக்கொண்டிருந்தனர். இந்த ஜோடியை குல்தீப் யாதவ் பிரிந்தார். 32-வது ஓவரில் குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆரோன் ஃபின்ச்எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார். மேக்ஸ்வெல் - கவாஜாவுடன் இணைந்தார். ஆரம்பம் முதலே மேக்ஸ்வெல் அதிரடிகாட்டினார். இதற்கிடையில்  உஸ்மான கவாஜா ஒரு நாள் கிரிக்கெட்டில் சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்திய பந்துவீச்சாளர்களை மிரட்டிக்கொண்டிருந்த கவாஜா 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. 

கவாஜா

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பே அதிர்ச்சி காத்திருந்தது. 4 ஓவரில் தவான் ஒரு ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். ரோஹித் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பாதி ராயுடுவும் கம்மின்ஸ் பந்துவீச்சில் க்ளின் போல்டானார். இதையடுத்து தோனி - கோலி இருவரும் அணியை மீட்கும் பொறுப்பில் விளையாடி வருகிறார்கள். தோனி 25 ரன்களில் க்ளீன் போல்டானார். இதையடுத்து கோலியுடன் கேதர் ஜாதவ் இனைந்தார் இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தனர்.

விராட் கோலி

கோலி தனது அரைசதத்தைக் கடந்தார். அடுத்து அதிரடியில் இறங்கிய கோலி வேகமாக ரன்களைச் சேர்ந்தார். இந்த நிலையில் கேதர் ஜாதவ் சுழற்பந்துவீச்சாளர் ஜாம்பா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். சிறப்பாக விளையாடிய கோலி தனது 41வது சதத்தைப் பூர்த்தி செய்தார். 123 ரன்களில் எடுத்திருந்தபோது கோலி அவுட்டானார். சிறிதுநேரம் மிரட்டிய விஜய் சங்கர் 32 ரன்களில் அவுட்டானது இந்தியாவின் நம்பிக்கை வீணானது. இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா அணி தொடரைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளது. 


[X] Close

[X] Close