`இனிமேலும் வீழ்ச்சிகாண விரும்பவில்லை; மாற்றங்களுடன் மீண்டெழுவோம்!’ - விராட் கோலி #INDvAUS | we will regroup and come back stronger - Virat Kohli

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (09/03/2019)

கடைசி தொடர்பு:08:00 (09/03/2019)

`இனிமேலும் வீழ்ச்சிகாண விரும்பவில்லை; மாற்றங்களுடன் மீண்டெழுவோம்!’ - விராட் கோலி #INDvAUS

கோலி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில்  5 விக்கெட்டுகள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 104 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பே அதிர்ச்சி காத்திருந்தது. 4 ஓவரில் தவான் ஒரு ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.  ரோஹித் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய அம்பத்தி ராயுடுவும் கம்மின்ஸ் பந்துவீச்சில் க்ளின் போல்டானார். 

தோனி

இந்திய அணியின் கேப்டன் கோலி மட்டும் தனி ஆளாகப் போராடினார். சிறப்பாக விளையாடிக் கோலி தனது 41சதத்தை பூர்த்தி செய்தார். 123 ரன்களில் எடுத்திருந்த போது கோலி அவுட்டானார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

விராட் கோலி

போட்டிக்குப் பின்னர் பேசிய கோலி, ``ஆஸ்திரேலியா வீரர்கள் பேட்டிங் செய்ததை பார்க்கும்போது அவர்கள் 350 ரன்கள் எடுத்து விடுவார்கள் என்பது போல் இருந்தது. ஆனால் அவ்வாறு நடக்கவிடவில்லை. போட்டிக்கு முன்னபாக மாலையில் பனி வந்துவிடும் என கூறினேன். ஆனால் அதுநடக்கவில்லை. சூழலை நான் தவறாகக் கணித்து விட்டேன். ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசினார்கள். சரியான திசையில் தொடர்ந்து பந்துவீசினர். நான் அவுட்டானது, விஜய் விக்கெட் இழந்ததும் இதனால்தான். நான் அடித்த சதங்களில் இது சிறப்பான ஒன்றாகும். நான் அவுட்டான விதம் எனக்கு ஏமாற்றம் தந்தது. எந்த அணியும் முதல் 5 வீரர்கள் விரைவாக வெளியேறுவதை விரும்பமாட்டார்கள். இந்தத் தொடரில் நாங்கள் பல போட்டிகளில் 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்துவிட்டோம். அணி வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆடம் ஜாம்பா சிறப்பாகப் பந்துவீசினார். அந்த அணிக்கு வெற்றியும் தேடித் தந்துவிட்டார். உஸ்மான் கவாஜா சிறப்பாக பேட்டிங் செய்தார்.  

ஜாம்பா

கிரிக்கெட்டில் மிகப்பெரிய பெருமைகளை கொண்ட அணி இது. நாங்கள் இனிமேலும் வீழ்ச்சியைக் காண விரும்பவில்லை. இந்தியா வெற்றிபெற வேண்டும் அது மட்டும்தான் எங்கள் மனதில் உள்ளது. எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். உலகக்கோப்பைத் தொடர் விரைவில் வரவுள்ளது. அனைவரும் அந்த விமானத்தில் ஏறும் எண்ணத்தில்தான் உள்ளனர். அடுத்தடுத்த போட்டிகளில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும். மிடில் ஆர்டரில் சில தேக்கங்கள் இருக்கிறது. நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்’’ என்றார்.
 


[X] Close

[X] Close