கோலி சொன்ன `மாற்றம்’ -ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் தோனிக்கு ஓய்வு! | Dhoni to Be Rested For Last Two ODIs Against Australia says Sanjay Bangar

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (09/03/2019)

கடைசி தொடர்பு:09:37 (09/03/2019)

கோலி சொன்ன `மாற்றம்’ -ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரு போட்டிகளில் தோனிக்கு ஓய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் தோனி விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில் நேற்றைய போட்டியில் போராடித் தோற்றது. 313 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் கோலி மட்டும் தனி ஆளாகப் போராடினார். சிறப்பாக விளையாடிக் கோலி தனது 41 -வது சதத்தை பூர்த்தி செய்தார். 123 ரன்களில் எடுத்திருந்த போது கோலி அவுட்டானார். இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

புவனேஷ்வர் குமார்

இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய கோலி, ``எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். உலகக்கோப்பைத் தொடர் விரைவில் வரவுள்ளது. அனைவரும் அந்த விமானத்தில் ஏறும் எண்ணத்தில்தான் உள்ளனர். அடுத்தடுத்த போட்டிகளில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும். மிடில் ஆர்டரில் சில தேக்கங்கள் இருக்கிறது. நாங்கள் மீண்டும் வலுவாக வருவோம்’’ என்றார்.

தோனி

அவரின் பேச்சின் மூலம் இந்திய அணியில் அடுத்த போட்டியில் சில மாற்றங்கள் உள்ளது உறுதியாகியுள்ளது. அதன்படி, அடுத்த போட்டியில் யார் விளையாட மாட்டார் என்பது குறித்து அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பஙகார் கூறுகையில், ``அடுத்தப் போட்டியில் தோனிக்கு ரெஸ்ட் கொடுக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரிஷப் பன்ட் விளையாடுவார். உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக நடக்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக மட்டுமே பன்ட் சேர்க்கப்படுகிறார். இதேபோல் மேலும் சில மாற்றங்கள் இருக்கும். ஷமிக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாகவில்லை என்றால் புவனேஷ்வர் குமார் களமிறக்கப்படுவார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close