மிடில் ஆர்டரில் சொதப்பல்; அணியின் நிலையற்ற தன்மைக்கு என்ன காரணம்? - கும்ப்ளே | Anil Kumble unhappy with Virat Kohli-led Team

வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (15/03/2019)

கடைசி தொடர்பு:18:35 (15/03/2019)

மிடில் ஆர்டரில் சொதப்பல்; அணியின் நிலையற்ற தன்மைக்கு என்ன காரணம்? - கும்ப்ளே

இந்திய அணியின் நிலையற்ற தன்மை குறித்து பேசியுள்ள கும்ப்ளே, `மிடில் ஆர்டரில் கவனம் தேவை. தோனியை எந்த இடத்தில் இறக்க வேண்டும்'' என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இந்திய அணியின் இந்தத் தோல்வி, பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை எழுப்பியது. ஃபார்ம் அவுட் ஆகிறதா இந்தியா? என்றெல்லாம் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், அணியின் வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்பது குறித்து கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார்.

விராட் கோலி

அவர், ``இந்திய அணியின் முதல் 3 பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம்தான், கடந்த 2 ஆண்டுகளில் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்துள்ளது. இன்றும் இது தொடர்கிறது. ஒருநாள் போட்டிகளில் முதல் 3 பேட்ஸ்மேன்களின் ஆட்டம்தான் வெற்றிக்கு வழிவகுக்கும். அந்த வகையில் என்னைப் பொறுத்தவரை தோனியை 4-ம் இடத்தில் களமிறக்க வேண்டும். நான்கு, ஐந்து, ஆறு ஆகிய இடங்களில் யார் யாரெல்லாம் தோனியைத்தவிர பொருத்தமாக இருப்பார்கள் என செய்யப்பட்ட பரிசோதனைதான் அணியின் நிலையற்ற தன்மைக்கு காரணம். அரையிறுதியில் முதல் 3 பேட்ஸ்மேன்கள் ஆட்டத்தில் சொதப்பிவிட்டால் என்ன செய்ய முடியும்? அதற்காகத்தான் மிடில் ஆர்டர் வலுவாக இருக்க வேண்டும்.

தோனி

இங்குதான் வீரர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கவில்லை. குறிப்பாக உலகக்கோப்பை இருக்கும்போது முன்னதாக நிறைய வாய்ப்புகளை வழங்கியிருக்க வேண்டும் மாற்றிக்கொண்டேயிருந்தால் எப்படி நிலைத்தன்மை இருக்கும். மிடில் ஆர்டர் வீரர்களைத் தேர்வு செய்வதில் தெளிவு இல்லை. டாப் 4 வீரர்கள் தரமாக இருக்க வேண்டும், அதனால்தான் தோனியை நான் 4-ம் இடத்துக்கு நிரந்தரமாக்க விரும்புகிறேன்'' என்றார்.


[X] Close

[X] Close