`இந்தப் பேச்சுதான் என்னை எரிச்சலடையவைக்கிறது’ - உலகக்கோப்பை குறித்து இஷாந்த் ஷர்மா நம்பிக்கை | Dhoni Saved me for getting Drop - Ishant sharma

வெளியிடப்பட்ட நேரம்: 20:46 (16/03/2019)

கடைசி தொடர்பு:20:50 (16/03/2019)

`இந்தப் பேச்சுதான் என்னை எரிச்சலடையவைக்கிறது’ - உலகக்கோப்பை குறித்து இஷாந்த் ஷர்மா நம்பிக்கை

இஷாந்த் நம்பிக்கை

இந்தியாவில் ஐ.பி.எல் திருவிழா இன்னும் சில நாள்களில் தொடங்கப்போகிறது. இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஷாந்த் சர்மா இந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காகக் களமிறங்கவுள்ளார். இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் கனவில் இந்திய வீரர்கள் உள்ளனர். உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்கும் இஷாந்த ஷர்மா ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் கழற்றிவிடப்படுகிறார். சீனியர் பந்துவீச்சாளரான இவர் உலகக்கோப்பை அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என
நம்பிக்கை தெரிவித்துள்ளார் இஷாந்த்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஷாந்த், “குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டிகளுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்ற கருத்துகள்தான் என் நிலைமைக்குக் காரணம். ஆனால், அந்தக் கருத்துகள் எங்கிருந்து வந்தன என்பது எனக்குத் தெரியவில்லை. இவர் டெஸ்ட் பந்துவீச்சாளர், இவர் டி-20 பந்துவீச்சாளர்... வெள்ளை நிற பந்துகள்தான் இவருக்கு சரிபட்டு வரும். இவருக்கு சிவப்பு நிற பந்துகள்தான் என்ற முத்திரைகள் ஒரு பந்துவீச்சாளரை எரிச்சலடைய வைக்கிறது. சிவப்பு நிற பந்துகளில் சிறப்பாக பந்துவீசுபவர்கள் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் சிறப்பாகச் செயல்பட முடியும். அதுதான் கிரிக்கெட்டின் அடித்தளம். வெள்ளை நிற பந்துகளில் உங்களது சிறப்பம்சங்களைச் சேர்க்க வேண்டும். இதில் நான் சிறப்பாகச் செயல்பட்டால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி 4-வது பந்துவீச்சாளர்களை
தேடிக்கொண்டுதான் இருக்கிறது. 

இஷாந்த் ஆரோன் ஃபின்ச் விக்கெட்டை வீழ்த்திய போது


டெஸ்ட் பந்துவீச்சாளர் என்ற முத்திரை என்னைச் சோர்வடையச் செய்கிறது. நான் இப்போது விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். விக்கெட்டுகள்தான் என் மீது மற்றவர்கள் கொண்டுள்ள அபிப்ராயத்தை மாற்றும். இந்த விவகாரத்தில் நான் யாரையும் குறை கூற மாட்டேன். நான் என்னைப் பற்றி மட்டுமே பேசுவேன். இதுகுறித்து மற்றவர்களிடம் காரணம் தேட மாட்டேன். நான் தேர்வாகவில்லை என்பதற்காக மற்றவர்களைக் குறை கூறுவது என்பது அநாகரிகமானது. 

கிரிக்கெட்

கவுன்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த கில்லெஸ்லிபிக்கு என்னை மேலும் மெருகேற்றினார். அவருக்கு எனது நன்றிகள். 4 போட்டிகள் நிறைய ஓவர்கள் பந்துவீசி இருப்பேன். வெவ்வேறு வகையான பேட்ஸ்மேன்களுக்கு எதிராகப் பந்துவீசும்போது நாம் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக வருகிறோம். கோலி கடினமான சூழ்நிலைகளில் என் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். தோனி எனது கடினமான காலங்களில் உறுதுணையாக இருந்தார். அணியில் இருந்து பல சமயங்கள் நீக்கப்பட்டிருப்பேன், அப்போது தோனிதான் ஆதரவாக இருந்தார். தோனி இந்திய அணிக்கு மிகப்பெரிய சொத்து. அவர் கேப்டனுக்கு உறுதுணையாக இருக்கிறார். அவர் ஒரு ஜாம்பவான். இந்திய அணிக்காக அவர் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கிறார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்போதும் கோலி என் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறார் என்றார்.


[X] Close

[X] Close