சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி - சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல்! | CSK to donate proceeds from opener against RCB to families of Pulwama martyrs

வெளியிடப்பட்ட நேரம்: 16:33 (21/03/2019)

கடைசி தொடர்பு:16:33 (21/03/2019)

சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி - சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தல்!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

பெரும் எதிர்பார்ப்பில் உல்ள 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, சென்னையில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. சமீபத்தில், ஐபிஎல் தொடரின் முதல் 17 போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் திருவிழா சென்னையில் தொடங்க உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கான டிக்கெட் விற்பனை சமீபத்தில் நடந்து முடிந்தது. இரவு முழுவதும் காத்திருந்து ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கிவந்தனர். 

சூப்பர் கிங்ஸ்

இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது. ஏற்கெனவே, பிசிசிஐ மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் பங்கேற்ற நிலையில், தற்போது சி.எஸ்.கே நிர்வாகமும், உதவ முன்வந்துள்ளது. அதன்படி, முதல் போட்டியில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் பணத்தை அப்படியே சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான காசோலையை நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டி முடிந்த பிறகு, சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களிடம் தோனி வழங்க உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க