``நாங்களும் அண்ணன் தம்பிதான்!" - தோனி, பிராவோவின் ஜாலி வீடியோ #Video | 'Brother from another mother'- Viral video of Dhoni and Bravo

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (23/03/2019)

கடைசி தொடர்பு:07:55 (23/03/2019)

``நாங்களும் அண்ணன் தம்பிதான்!" - தோனி, பிராவோவின் ஜாலி வீடியோ #Video

இந்த ஐபிஎல் சீசன் இன்று ஆரம்பிக்கவுள்ளது. சென்னையில் நடக்கவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கு நடுவில் சென்னை அணிக்காக ஆடும் பிரபல வீரர் பிராவோ 'ஆசியா' என்னும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்குமுன் இந்த புதிய பாடல் வெற்றிபெற தோனி மற்றும் சில வீரர்கள் வாழ்த்திய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோவில் பாடலை வாழ்த்திய பிறகு "என்ன பங்கு ஓகேவா?" என்று பிராவோவை பார்க்க "தாய் வேறு என்றாலும் நாம் அண்ணன் தம்பிதான்" என்றார். அவர் சொல்லிமுடிப்பதற்குள் தோனியும் அவருடன் இணைந்து "Brother from another mother" சிரித்துக்கொண்டே கூறினார். இவர்களின் இந்த ஜாலி வீடியோ இப்போது அனைத்துச் சமூக வலைத்தளங்களில் வைரல். மேலும் சச்சின் டெண்டுல்கர், சங்கக்காரா என மற்ற வீரர்களும் இந்த பாடலின் வெற்றிக்காக பிராவோவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிராவோவின் புதிய பாடல்

ஏற்கெனவே 'சாம்பியன்' போன்ற பாடல்களை உருவாக்கியுள்ள பிராவோவின் இந்த புதிய பாடல் சிஎஸ்கே வீரர்கள் முன்னணியில் வெளியிடப்பட்டது. இதற்கு அனைவரும் நடனமாடி மகிழ்ந்தனர். முன்பை போல ஆட்டங்களின் நடுவே இந்த நடனத்தை பிராவோ ஆடுவர் என எதிர்பார்க்கலாம். அந்த புதிய பாடல் கீழே,

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க