ராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே! | ipl 2019 starts in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 19:19 (23/03/2019)

கடைசி தொடர்பு:00:11 (24/03/2019)

ராயுடு சேஸிங்; ஜாதவ் ஃபினிஷிங் - வெற்றியுடன் ஐ.பி,எல்-லை தொடங்கியது சி.எஸ்கே!

ஜடேஜா - ஜாதவ் இணைந்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த 7 விக்கெட் வித்தியாசத்தில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது சி.எஸ்.கே அணி!  பெங்களூர் அணி சார்பில் சாஹல், சிராஜ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்

சி.எஸ.கே வெற்றி!

சிராஜ் பந்துவீச்சில் 26 ரன்களை எடுத்து, போல்டாகி நடையை கட்டினார் ராயுடு. 14.2 ஓவரில் 52 ரன்களை சேர்த்துள்ளது சி.எஸ்.கே. ஜடேஜா களமிறக்கப்பட்டுள்ளார்.

கோலி

கேதார் ஜாதவ் ஆன். 10 ஓவர்களில் 42 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை இழ்ந்துள்ளது சி.எஸ்.கே

சிஎஸ்கே

மொயின் அலியின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியறினார் ரெய்னா. 

ரெய்னா அவுட்!

ஐ.பி,எல் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் ரெய்னா

ரெய்னா

ரெய்னாவின்  ஆட்டம் அணியுடைய வெற்றியில் பெரும் பங்கு வகிக்கும். டெஸ்ட் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே சதம் அடித்தவர், அனைத்து விதமான கிரிக்கேட் போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர், டி20 உலக கோப்பையில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என பல சாதனைகளுக்கு சொந்தகாரர் ரெய்னா..ஆனால் அவருக்கே தெரியாத சாதனையும் ஒன்று உள்ளது, பல ஸ்டிரீட் ப்ளேயர்களை இடதுகை ஆட்டாக்காரர்களாக மாற்றியவர் அவர்.. தோனிக்கு அடுத்தப்படியாக அதிக ரசிகர் பட்டாளங்களுக்கு சொந்தகாரர்ரான ரெய்னா, ஷாட் பால்களில் சொதப்பியதால் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்..

அம்பதி ராயுடுவுடன் கைகோர்க்க களத்துக்கு வந்தார் ரெய்னா. இருவரும் இணைந்து பொறுமையான, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 7 ஓவருக்கு 24 ரன்கள்.

சிஎஸ்கே

இரண்டாவது ஓவரில் வாட்சனை சாஹல் போல்டாக்கினார். 8 ரன்களில் 1விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே

ஆர்சிபி

71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சி.எஸ்.கேவுக்கு ராயுடு, வாட்சன் துவக்கம் கொடுத்தனர். சாஹல் வீசிய முதல் ஓவரில் ரன் எதுவும் இல்லை

தோனி

சிஎஸ்கே வெற்றி பெற 71 ரன்கள் இலக்கு!

தோனி

நீண்ட நேரமாக நிலைத்து நின்ற பார்த்திவ் படேலும் கைவிட 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 70 ரன்களுக்குள் ஆர்சிபியை சுருட்டியது சிஎஸ்கே. ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். ஆர்சிபியில் அதிகபட்சமாக பார்த்தீவ் படேல் 29 ரன்கள் எடுத்தார்.

கோலி

உமேஷ்யாதவ் 1 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் போல்டாகி வெளியேற 70 ரன்களுக்கு 9 விக்கெட்டை தாரைவார்த்தது ஆர்சிபி

5 நிமிடத்துக்கு ஒரு வீரர் என்ற இடைவெளியில் பெங்களூர் பேட்ஸ்மேன்கள் வெளியேறியது, அணியின் ரன்ரேட்டை பெருமளவு குறைத்துள்ளது.

* சாஹல் 4 ரன்களில் நடைகட்டினார். 13 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தடுமாறி வருகிறது. 

இந்திய அணி தரப்பில், ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இம்ரான் தாஹிர்

சைனி அவுட்! பரிதாபமான நிலையில் ஆர்சிபி.

கேட்ச்

சில நிமிடங்களிலே  கிராண்ஹோமும் வெளியேற 6 விக்கெட்டை இழந்து 50 ரன்களை மட்டுமே சேர்த்தது ஆர்சிபி. திணறிக்கொண்டிருக்கும் அணியை  பர்திவ் படேல் எதிர்புறம் நின்றுகொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

சிஎஸ்கே

வீசிய 2 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஹர்பஜன் . அடுத்தாக மைதானத்துக்குள் வந்தார் ஏ.பி.டிவில்லியர்ஸ். அணிக்கு நம்பிக்கை கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் அவரது கேட்சை மிஸ் செய்தார் இம்ரான் தாஹிர். ஆனால் அடுத்த பந்தே மீண்டும் கேட்ச் போக அதை லாவகமாக பிடித்து ஆர்.சி.பியை மிரட்டினார் ஜடேஜா. தொடர்ந்து ஹெட்மெயரும் ரன் அவுட்டாக, 8 ஓவரின் முடிவில் 38-4 என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது ஆர்சிபி.  அடுத்து களமிறங்கிய ஷிவம் டுபேவும் இதற்கு விதிவிலக்கில்லை. 2 ரன்களில் இம்ரான் தாஹிரால் வெளியேற்றப்பட்டார்.

ஹர்பஜன்

அதன்படி, ஆர்சிபிக்கு கோலியும், பர்திவ் படேலும் துவக்கம் கொடுத்தனர். கோலி சிங்கிள் எடுக்க, தீபக் சாஹரின் ஓவரில்  ஐ.பி.எல் -ன் முதல் 4-ஐ அடித்து உற்சாகம் கொடுத்தார் பர்திவ் படேல். ஹர்பஜன் சிங்கின் 3வது ஓவரின் 3வது பந்தை கோலி தூக்கி அடிக்க, அது ஜடேஜாவின் கைக்குள் ஐக்கியமானது. 6 ரன்களில் வெளியேறினார் கோலி. அடுத்ததாக களமிறங்கிய மொயின் அலி, வந்த வேகத்தில் சிக்ஸ் அடித்து மிரட்டினார்.ஆனால் அவரும் ஹர்பஜன் சிங் வீசிய 5வது ஓவரில், அவரிடமே கேட்ச் கொடுத்து 9 ரன்களில் நடையை கட்டினார்.  

டாஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஜ்ர்ஸ் பெங்களூர் இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தோனி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல்

`தோனி விஸஸ் கோலி’ இந்த முழக்கம் தான் கடந்த 2 நாள்களாக சமூக வலைதளங்களில் நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் முதல்நாள் முதலே நீண்ட வரிசையில் நின்று, வாங்கிச்சென்றனர். ஆன்லைன் டிக்கெட்டுகள் நொடியிலே விற்றுத் தீர்ந்தன. சென்னை வந்தடைந்த தோனி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, ரசிகர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி மைதானத்துக்குள் நுழைந்த வீடியோ வைரலானது.

அதேபோல சென்னைவந்தடைந்த கோலி தலைமையிலான அணிக்கும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். போட்டி குறித்து பேசிய கோலி, ``எங்கள் அணி வலுவாக இருக்கிறது. அனைவருக்கும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல ஆசை இருக்கிறது. நாங்கள் சிறப்பாக விளையாடியும் ஐ.பி.எல் கோப்பையை வெல்ல முடியாதது வருத்தமாக உள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் தவறான முடிவுகள் எடுத்தது உள்ளிட்ட காரணங்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. சென்னை அணிக்கு எதிராக சென்னையில் விளையாடுவது எப்போதும் சவாலானதுதான். அணிக்கு என்ன தேவை என்பதைச் சரியாக அறிந்தவர் தோனி" என்றார்.

ஆர்சிபி

இந்நிலையில் ஐ.பி.எல் போட்டியைக்காண சேப்பாக்கத்தைச்சுற்றி ஏராளாமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். எங்கு பார்த்தாலும், யெல்லோ ஆர்மி படையெடுத்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சி.எஸ்.கே டி-சர்ட்களை அணிந்து வண்ணம் வலம் வருகின்றனர். டாஸ் வென்ற தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சிஎஸ்கே

சென்னையில் நடக்கும் முதல் போட்டி என்பதால் சேப்பாக்கம் மைதானத்தைச்சுற்றி திருவிழா கோலம்பூண்டுள்ளது. இதனால் அப்பகுதியில் லேசான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. 

டாஸ்

சி.எஸ்.கே ப்ளேயிங் லெவன் - தோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா, ஜாதவ், ஜடேஜா, ப்ராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகுர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்

ஆர்.சி.பி ப்ளேயிங் லெவன் - விராட் கோலி, பார்த்திவ் படேல், மொயின் அலி, ஏபிடிவில்லியர்ஸ், ஹெட்மெயர், சிவம் டியூப், கோலின் டி கிராத்தோம், உமேஷ்யாதவ், சாஹல், முஹம்மத் சிராஜ், நவ்தீப் சைனி,