புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி! | csk donates 2 crore to families of pulwama martyrs

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (24/03/2019)

கடைசி தொடர்பு:06:30 (24/03/2019)

புல்வாமாவில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 கோடி நிதியுதவி!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்துள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ்

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த 2019-ம் ஆண்டுக்கான ஐபிஎல் திருவிழா, சென்னையில் இன்று தொடங்கியது. சமீபத்தில், ஐபிஎல் தொடரின் முதல் 17 போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதனால் எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறமாகவே காட்சி அளிக்கிறது.  இந்தநிலையில் சிஆர்பிஎப் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிதியுதவி செய்ய முன்வந்தது. 

அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும்  ஆட்டத்தில் டிக்கெட் விற்பனையில் கிடைக்கும் அனைத்து தொகையையும் புல்வாமா தாக்குதலில் பலியானா சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் என ஏற்கனவே சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கு சிஎஸ்கே அணி சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. சென்னை கேப்டன் தோனி நிதியுதவியை அளித்தார். இதேபோல் ஐபிஎல் தொடக்க விழாவுக்கான செலவுத் தொகை ரூ.20 கோடி சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க