வில்லி இன்... தாஹிர் அவுட்... டெல்லியில் என்ன செய்யப்போகிறார் தோனி?! #CSKVsDC PREVIEW | David Willey in... Tahir out... Whats the Gamplan of Dhoni in Delhi?! #CSKVsDC

வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (26/03/2019)

கடைசி தொடர்பு:13:37 (26/03/2019)

வில்லி இன்... தாஹிர் அவுட்... டெல்லியில் என்ன செய்யப்போகிறார் தோனி?! #CSKVsDC PREVIEW

டெல்லி மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம் என்பதால் வேகப்பந்து வீச்சில் சென்னையைவிட சிறந்த பெளலர்களைக் கொண்டிருக்கிறது டெல்லி. ட்ரென்ட் போல்ட், ரபடா, இஷாந்த் ஷர்மா, கிறிஸ் மோரிஸ் எனச் சென்னையின் பேட்டிங் ஆர்டரை இந்த பெளலிங் அட்டாக் சிதைக்கக்கூடும்.

வில்லி இன்... தாஹிர் அவுட்... டெல்லியில் என்ன செய்யப்போகிறார் தோனி?! #CSKVsDC PREVIEW

சொந்த மண்ணில் பெங்களூரைச் சுருட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ், அடுத்ததாகச் சந்திக்க இருப்பது டெல்லியை, அவர்களின் சொந்த மண்ணில்! சுழற்பந்துக்குச் சாதகமாக இருந்த சென்னை பிட்சில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இறங்கினார் தோனி. ஆனால் இந்த முறை போட்டி நடப்பது வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில்... என்ன செய்யப்போகிறார் தோனி?!

தோனி, ஹர்பஹன் சிங்

சென்னையின் ப்ளேயிங் லெவன்!

ஓர் அணிக்கு நான்கு வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம் என்கிற நிலையில் முதல் போட்டியில் வாட்ஸன், பிராவோ, தாஹிர் என மூன்று வெளிநாட்டு வீரர்களுடனேயே இறங்கினார் தோனி. இன்றைய போட்டியிலும் மூன்று வெளிநாட்டு வீரர்கள்தாம் சென்னை அணியில் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இன்றைய போட்டியில் இம்ரான் தாஹிருக்கு பதிலாக டேவிட் வில்லி அணியில் இடம்பிடிப்பார். வில்லி, ஷ்ரதுல் தாக்கூர், தீபக் சாஹர், பிராவோ என்பதுதான் தோனியின் வேகப்பந்து வீச்சு அட்டாக்காக இருக்கும். டெல்லி அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் என்பதால் ஆஃப் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் அணியில் இடம்பிடிப்பார். ரவீந்திர ஜடேஜாவும் இடது கை ஆர்த்தோடாக்ஸ் ஆஃப் ஸ்பின் பெளலர் என்பதால் இவரது பந்து வீச்சும் தோனிக்கு பலமாக இருக்கும்.

தோனி

டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னையின் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கலாம். வாட்ஸன் - அம்பதி ராயுடு ஓப்பனிங் இணையாகவும், 1 டவுனில் ரெய்னா, அடுத்ததாக ஜாதவ், தோனி, பிராவோ என்பதுதான் சென்னையின் பேட்டிங் ஆர்டராக இருக்கும். டு ப்ளெஸ்ஸிஸ்க்கு இப்போதைக்கு அணியில் இடம் இல்லை என்றே தெரிகிறது.

டெல்லியின் ப்ளேயிங் லெவன்!

டெல்லி அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் மோரிஸ் அணிக்குள் இடம்பிடிக்கலாம்.  மும்பை அணிக்கு எதிராகப் பட்டையைக் கிளப்பிய பன்ட்தான் டெல்லி அணியின் பலம். ஷிகர் தவானும் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரிடமிருந்தும் டெல்லியில் பட்டாசுகளை எதிர்பார்க்கலாம். ப்ரித்வி ஷா, தவான், ஷ்ரேயாஸ் ஐயர், காலின் இங்ராம், ரிஷப் பன்ட், டெவாட்டியா என்பதுதான் டெல்லியின் பேட்டிங் ஆர்டராக இருக்கும். ரிஷப் பன்ட், ஷிகர் தவானின் விக்கெட்டுகளை எவ்வளவு சீக்கிரம் சென்னை அணி வீழ்த்துகிறதோ அதைப்பொறுத்துதான் வெற்றியும், தோல்வியும் இருக்கிறது. 
டெல்லி மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம் என்பதால் வேகப்பந்து வீச்சில் சென்னையைவிட சிறந்த பெளலர்களைக் கொண்டிருக்கிறது டெல்லி. ட்ரென்ட் போல்ட், ரபடா, இஷாந்த் ஷர்மா, கிறிஸ் மோரிஸ் எனச் சென்னையின் பேட்டிங் ஆர்டரை இந்த பெளலிங் அட்டாக் சிதைக்கக்கூடும். 

தோனி

சென்னையே கெத்து!

சென்னையும் டெல்லியும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 18 முறை மோதியிருக்கின்றன. இதில் 12 போட்டிகளில் சென்னையே வெற்றிபெற்றிருக்கிறது. டெல்லியில் அதிகபட்சமாக 190 ரன்களைக் குவித்திருக்கிறது சென்னை. அதேபோல் குறைந்தபட்ச ரன்களாக 83 ரன்களுக்கு இந்த பிட்சில் ஆல் அவுட் ஆகியிருக்கிறது டெல்லி. சென்னை அணியின் மேத்யூ ஹேடன் அதிகபட்சமாக இங்கு 93 ரன்களை அடித்திருக்கிறார். 

டாஸ்!

யார் டாஸ் வென்றாலும் முதலில் ஃபீல்டிங்கையே தேர்ந்தெடுப்பார்கள். இந்த பிட்சில் சேஸிங் செய்வதே புத்திசாலித்தனமாக இருக்கும்!

இரண்டு அணிகளுமே முதல் போட்டியில் வெற்றியோடு தொடங்கியிருக்கின்றன. இரண்டாவது வெற்றி யாருக்கு என்பதில்தான் இன்று போட்டாபோட்டி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்