மாற்றமில்லாமல் களமிறங்கும் சி.எஸ்.கே! - பேட்டிங் தேர்வு செய்த டெல்லி #DCvCSK | IPl 2019: DC won the toss and elected to bat against CSK

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (26/03/2019)

கடைசி தொடர்பு:20:02 (26/03/2019)

மாற்றமில்லாமல் களமிறங்கும் சி.எஸ்.கே! - பேட்டிங் தேர்வு செய்த டெல்லி #DCvCSK

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டாஸ்வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

தோனி தலைமையிலான  சி.எஸ்.கே வீரர்கள் #DCvCSK

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் 5-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் வெற்றிபெற்றதால் நம்பிக்கையுடன் இந்தப் போட்டியில் களம்காண்கின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். 
ஆர்.சி.பிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் சென்னை அணி களம்காண்கிறது. அதேநேரம், டெல்லி அணியில் ஒரு மாற்றமாகக் கடந்த போட்டியில் விளையாடிய டிரெண்ட் பவுல்டுக்குப் பதிலாக அமித் மிஸ்ரா பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 #DCvCSK பிளேயிங் லெவன்

ஐ.பி.எல் போட்டியில் ஒரு அணி 4 வெளிநாட்டு வீரர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதி இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் பங்கேற்கும் இரு அணிகளுமே தங்களது பிளேயிங் லெவனில் தலா 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே சேர்த்திருக்கின்றன. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. அதில், சி.எஸ்.கே 12 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றிபெற்றிருக்கின்றன.

சென்னை அணி, தனது முதல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்.சி.பியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதேநேரம், டெல்லி அணி தனது முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.