`ரூல்ஸ் படி சரிதான்; அஸ்வின் எச்சரித்திருக்கலாம்!'- பட்லர் விவகாரத்தில் டிராவிட் கருத்து | he would have warned first - Rahul Dravid

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (27/03/2019)

கடைசி தொடர்பு:13:20 (27/03/2019)

`ரூல்ஸ் படி சரிதான்; அஸ்வின் எச்சரித்திருக்கலாம்!'- பட்லர் விவகாரத்தில் டிராவிட் கருத்து

அஷ்வின்

ஐபிஎல் கிரிக்கெட்டில்,  ‘மன்கடட்’ முறையில் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தி பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார் அஷ்வின். முன்னாள் இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் என அஷ்வினுக்கு எதிராக வார்த்தைப் போர் தொடுக்க, கிரிக்கெட் ரூல்ஸில் என்ன இருக்கிறதோ அதைத்தான் செய்தேன் என முடித்துக்கொண்டார் அஷ்வின். இந்த விவகாரம் குறித்து, இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் ராகுல் டிராவிட், தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

டிராவிட்

“அஷ்வின்,  ‘மன்கடட்’ முறையில் பட்லரின் விக்கெட்டை வீழ்த்தியதில் எந்தத் தவறும் இல்லை. கிரிக்கெட் சட்ட திட்டத்தின்படி அவர் செயல்பட்டுள்ளார். அதில், அவர்மீது குறைசொல்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அவருக்கு பட்லருக்கு ஓர் எச்சரிக்கை விடுத்திருக்க வேண்டும். அவர் தொடர்ந்து அவ்வாறு செய்தால், அவரது விக்கெட்டை வீழ்த்தி இருக்க வேண்டும். சிலர் இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி, அவர் கெட்டவர் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். அஷ்வின் பார்வையில் அவர் செய்தது சரியே. உங்களுக்கு அவரது செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்பதற்காகக் குற்றம் சுமத்த முடியாது. இதைவைத்து அவரை மற்றவர்கள் மதிப்பிட முடியாது. அவர் யாரையும் ஏமாற்றவில்லை.

கிரிக்கெட்

நான் ஒரு பயிற்சியாளராக எனது அணி வீரர்களிடம் கூறவது என்னவென்றால், சிலர் விதிமுறைகளை மீறி செயல்படும்போது, முதலில் எச்சரியுங்கள். தொடர்ந்து அதுபோல ஈடுபட்டால், அதற்கான தண்டனையை அளியுங்கள் என்பதுதான். இதற்காக, அஷ்வினின் கேரக்டரை மதிப்பிடுவது என்பது சரியாகாது. மற்றோரு கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த விதிமுறை நாளையிலிருந்து இல்லை என வைத்துக்கொண்டால். பேட்ஸ்மேன்கள் கீரிஸில் இருந்து பல அடி தூரம் வரை தள்ளி நிற்பார்கள். அப்போது என்ன செய்வீர்கள்?  காரணம் இல்லாமல் எந்த விதியும் வகுக்கப்படுவதில்லை. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில்தான் உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.